Thursday, April 9, 2009

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6

உங்களுக்குள் வேற்றுமை கொள்ளாதீர்கள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார் : “ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

“நபி (ஸல்) அவர்கள், ‘வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்’ என்று கூறினார்கள் என எண்ணுகிறேன்” என்று அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார். ஆதாரம் : புகாரி

நபி (ஸல்) அவர்கள் இரவில் செய்த பிரார்த்தனை!

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார் : நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (தொழுவதற்காக எழும்போது பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீ வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவாய். உன் சொல் உண்மை; உன் வாக்குறுதி உண்மை; (மறுமையில்) உன் தரிசனம் உண்மை; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; மறுமைநாள் உண்மையானது. இறைவா! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன் மீதே நம்பிக்கை கொண்டேன்; உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன்; உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன்; உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர எனக்கு வேறெவரும் இறைவன் இல்லை.

ஸாபித் இப்னு முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்: சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் இதை நமக்கு அறிவித்துவிட்டு, ‘நீ உண்மை; உன் சொல் உண்மை’ என்றார்கள். ஆதாரம் : புகாரி

சொர்க்கத்தின் கருவூலம்!

அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (உரக்கச்) சொல்லி வந்தோம். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மெல்லக் கூறுங்கள்). ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, அருகிலிருந்து செவியேற்பவனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்’ என்றார்கள். பிறகு நான் என் மனத்திற்குள் ‘லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலம்டவும் முடியாது; நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவும் முடியாது) என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘அப்துல்லாஹ் இப்னு கையேஸ! ‘லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று சொல்லுங்கள். ஏனெனில் அது, ‘சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்’ என்றோ, ‘அதைப் பற்றி நான் அறிவிக்கட்டுமா?’ என்றோ சொன்னார்கள். ஆதாரம் : புகாரி

நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறை: -

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ (ரலி) அறிவித்தார் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக்
கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் ‘இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை சுலபமாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு சுபிட்சம் அளித்திடுவாயாக! இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!’ என்று பிரார்த்திக்கட்டும். ஆதாரம் : புகாரி

சொர்க்கத்தில் நுழைய ஆசையா?

“நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது - நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி

தூங்குவதற்கு முன்…

“நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி

இறைவனுக்கு மிக நெருக்கமானவராக வேண்டுமா?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

தஜ்ஜாலின் அடையாளங்கள்: -

“இறைவனால் அனுப்பிவைக்கப் பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. (நினைவிற் கொள்க!) அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால் உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனின் இரண்டு கண்களுக்கிடையே ‘காஃ’பிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-5

பள்ளிவாசல்கள் கட்டுவதின் சிறப்பு!

உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது ‘நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி), ஆதாரம் : புகாரி

தும்மினால் கூறவேண்டியவைகள்!

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) கட்டளையிட்ட ஏழு விஷயங்கள்: -

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள்.

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.
4. நலிந்தவருக்கு உதவுவது.
5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது
6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.
7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதாம்:

1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.
2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.
3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.
4. சாதாரணப் பட்டு அணிவது.
5. அலங்காரப் பட்டு அணிவது.
6. எகிப்திய பட்டு அணிவது.
7. தடித்த பட்டு அணிவது.

(ஆதாரம் : புகாரி)
பாவம் எனும் வேலியைச் சுற்றி மேயாதீர்கள்!

“ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேம்ப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :நுஃமான் இப்னு பஷீர்(ரலி), ஆதாரம் : புகாரி.

குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமான அத்தியாயம்!

“ஒருவர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (’நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே’) எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசி விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது’ என்றார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி), ஆதாரம் : புகாரி.

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்!

“மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ் தான் அதை அறிவான். மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி.

இறைவனைப் பார்த்ததாகவும் மறைவான விஷயங்கள் தமக்குத் தெரியும் என்றும் கூறுபவர் பொய்யரே!

ஆயிஷா(ரலி) அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கிறவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)’ என்றார்கள். அறிவிப்பவர் : மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்), ஆதாரம் : புகாரி.

நீங்கள் படுக்கைக்குச் சென்றால்…

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். காலையில் (எழும்போது) ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமர்த்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள். அறிவிப்பவர் :ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி), ஆதாரம் : புகாரி.

தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும் போது…

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸ்க்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) என்று பிரார்த்தித்து, அந்த உறவில் அத்தம்பதியருக்து விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-4

மார்க்க விஷயங்களில் எளிதாக நடந்து கொள்ளுங்கள்; மக்களை வெறுப்பேற்றாதீர்கள்!

“(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றி விடாதீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதே!

அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார்கள் : “நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் ‘அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் ‘மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்’ என்று பதிலளித்தார்கள். ஆதாரம் : புகாரி.

அண்ணலார் (ஸல்) அவர்களின் மன்னிக்கும் பெருந்தன்மை!

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக எதிலும் (யாரையும்) ஒரு பேதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகத் தண்டிக்க வேண்டுமென்று இருந்தாலே தவிர (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.) அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) அவர்களின் நளினம்!

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் : “ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களிடம் காட்டிய பரிவு!

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் : “நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் ‘அபூ உமைரே! பகுதி உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?” என்று கூடக் கேட்பார்கள். ஆதாரம் : புகாரி.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் : “நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்” ஆதாரம் : புகாரி.

இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்: -

“இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

விருந்துபசாரம் மூன்று நாட்களாகும்!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும். (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைஹ் குவைலித் இப்னு அம்ர் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழுங்கள்!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

மனிதன் யார் மீது அன்புவைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்: -

“இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்றார்கள்.” அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-3

சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் யார்?

நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை), ‘சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பிணவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வீன் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே,) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; அகம்பாவம் கொண்டவர்கள்; பெருமை பிடித்தவர்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது!

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

பினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: -

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) அவர்களின் கனிவு: -

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி (ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை கண்டேன். பிறகு அவர், ‘முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்’ என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள். என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

உண்மை சொர்க்கத்திற்கும் பொய் நரகத்திற்கும் வழிவகுக்கும்: -

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார்.
(இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

நயவஞ்சகனின் மூன்று அடையாளங்கள்: -

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசினால் பொய் சொல்வான்; வாக்களித்தால் மாறு செய்வான்; அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில் மோசடி செய்வான்) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

பொய்பேசுபவர்களுக்கான தண்டணைகள்: -

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் இன்றிரவு (கனவில்) இருவரைப் பார்த்தேன். அவர்கள் என்னிடம் வந்து (என்னைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று பல காட்சிகளைக் காட்டினார்கள். அவற்றில் ஒன்றுக்கு
விளக்கமளிக்கையில்) ‘தாடை சிதைக்கப்பட்ட நிலையில், நீங்கள் பார்த்தீர்களே அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச, அது அவரிடமிருந்து பரவி உலகம் முழுவதையும் அடையும். எனவே, ழூழூ(நீங்கள் பார்த்த) அந்தத் தண்டனை
அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப் (ரலி), ஆதாரம் : புகாரி.

ஒரு முஃமினை காஃபிர் என்று ஏசுவது கூடாது: -

‘ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து காஃபிரே! (இறைமறுப்பாளனே!) என்று அழைத்தால் அவர்கள் இருவரில் ஒரவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ்
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்!பெற்றோர் அல்லது பிள்ளைகளின் மீது சத்தியம் செய்யக் கூடாது!

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.

கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தம் வீட்டிலேயே நிறைவேற்றுவது தான் சிறந்ததாகும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தின் ஓர் இரவில்) பாயினால் ஒரு சிறிய அறையை (பள்ளிவாசலில்) அமைத்துக் கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி (நபித்தோழர்களில்) சிலரும் வந்து
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் வராமல் தாமதப்படுத்தினார்கள். எனவே, தோழர்கள் தங்களின் குரலை எழுப்பி (சப்தமிட்ட)னர்.
(நபியவர்களுக்கு நினைவூட்ட அவர்களின் வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வந்து, ‘(இத்தொழுகையில் கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செய்ல தொடர்ந்து கொண்டே போகிறது. (இத்தொழுகை) உங்களின் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (எனவேதான் இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவே, உங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தம் வீட்டிலேயே நிறைவேற்றுவது தான் சிறந்ததாகும்’ என்றார்கள். அறிவிப்பவர் : ஸைத் இப்னு ஸாபித் (ரலி), ஆதாரம் : புகாரி.

உண்மையான வீரன் யார்?

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.

நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்: -

நபி (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். ‘நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய். (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள்
பாதிக்கப்படுகின்றன.) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்’ என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்’ என்றார்கள். அறிவிப்பவர் :
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-2

எல்லா நற்செயல்களும் தர்மமே!

‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது கூட தர்மம் ஆகும்!

‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘தம் இரண்டு
கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்’ என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன
செய்வது?)’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்’ என்றார்கள். மக்கள், ‘(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)’ என்று
கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது நற்செயலை’(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்’ என்றார்கள். ‘(இதையும்) அவர் செய்யாவிட்டால்?’ என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், ‘அவர்
தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்’ என்றார்கள். அறிவிப்பவர் :அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி), ஆதாரம் : புகாரி.

பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து பாது காத்துக் கொள்ளுங்கள்:-

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தம் முகத்தைத் திருப்பினார்கள். பிறகு, ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்
அறிவிப்பவர் :அதீ இப்னு ஹாத்திம் (ரலி), ஆதாரம் : புகாரி.

உங்களில் மிகவும் சிறந்தவர் நற்குணமுடையவரே: -

முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, ‘அவர்கள்
இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை’ என்று கூறிவிட்டு, ‘நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர் :மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்), ஆதாரம் : புகாரி.

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! சாபமிடாதீர்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட ‘அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்’ என்றே கூறுவார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

இறுதி காலத்தின் அடையாளங்களில் சில!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட்)காலம் குறும்விடும்; நற்செயல் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக மக்களின் (மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும் ‘ஹர்ஜ்’ பெரும்விடும்’ என்று
கூறினார்கள். மக்கள், ‘ஹர்ஜ் என்றால் என்ன?’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை கொலை’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

பணியாளரை மதித்த உயர்ந்த பண்பாளர்: -

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ’ என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்’ என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை. அறிவிப்பவர் :அனஸ்(ரலி, ஆதாரம் : புகாரி.

வீட்டு வேலைகளை செய்த அண்ணலார் அவர்கள்!

‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள்.
தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்), ஆதாரம் : புகாரி.

முழுமையான ஈமானை எப்போது அடைய முடியும்?

(மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:) 1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின் மீண்டும்
அதற்குத் திரும்புவதைவிட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது. 3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராக வது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸ்லிமை ஏசுவது பாவமாகும்!

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

திட்டியவரிடமே திரும்பிச் செல்லும் சாபம்!

ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர் (ரலி), ஆதாரம் : புகாரி.

பணியாளர்களை மதிக்கும் பண்பாளர்களாகுங்கள்: -

“…. ‘(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். எனவே, யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரரை அல்லாஹ் வைத்துள்ளானோ அவர் தம்
சகோதரருக்குத் தாம் உண்பதிலிருந்து உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும். அவரின் சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவரின் சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்தால் அவருக்குத் தாமும் ஒத்துழைக்கட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : மஅரூர் இப்னு சுவைத்(ரஹ்), ஆதாரம் : புகாரி.

கோள் சொல்லித் திரிபவருக்கான தண்டனை: -

(ஒரு முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்து சென்றார்கள். அப்போது ‘(மண்ணறைகளிலுள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்) இருவரும் வேதனை செய்யப்படவில்லை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும்போது (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள் சொல்லி
(புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.

பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நாட்டார்கள். பிறகு, ‘இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின்
வேதனை குறைக்கப்படலாம்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.

நோன்பின் பலனை நீக்குபவைகள்: -

பொய்யான பேச்சைiயும் பொய்யான நடவடிக்கைகளையும் (நோன்பைப் பற்றிய) அறியாமையையும் கைவிடாதவர் (நோன்பின் போது) தம் உணவையும் பானத்தையும் (வெறுமனே) கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

மனிதர்களிலேயே மிகவும் மோசமானவர்: -

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

மனிதர்களை அளவு கடந்து புகழாதீர்கள்: -

ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுதான். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே!’ என்று பல
முறை கூறினார்கள். பிறகு, ‘உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், ‘(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு
இருப்பதாகச் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம்.
காலித் இப்னு மஹ்ரான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘(நபி (ஸல்) அவர்கள் தம் முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உனக்கு அழிவுதான்’ என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அறிவிப்பவர் :அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி),
ஆதாரம் : புகாரி.

பிறரின் குறையைத் துருவித் துருவி ஆராயாதீர்கள்: -

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேம்ப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

செய்த பாவங்களை வெளியில் பகிரங்கப்படுத்தாதீர்கள்: -

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பம்ரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்’ என்று அவனே கூறுவது பம்ரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுதல்’ என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள். அறிவிப்பவர் :வலீத் இப்னு அய்ஸார் (ரஹ்), ஆதாரம் : புகாரி.

தாயின் மகிமை: -

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

தம் தாய் தந்தையர் ஏசப்பட தாமே காரணம்?

‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) , ஆதாரம் : புகாரி.

அல்லாஹ் தடை செய்ததும் வெறுப்பதும்!

“அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி), ஆதாரம் : புகாரி.

பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள்: -

(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன். அறிவிப்பவர் :அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.

இணைவைக்கும் பெற்றோரையும் ஆதரிக்க வேண்டும்: -

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். ‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) கூறினார். அறிவிப்பவர் :அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி), ஆதாரம் : புகாரி.

உறவை முறிப்பவன் சுவனம் புகமாட்டான்: -

“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி), ஆதாரம் : புகாரி.

வாழ்வாதாரம் பெருக வேண்டுமா? ஆயுள் நீட்டிக்கபபட வேண்டுமா?

“தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

உறவை முறித்தால்?

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்: -

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

அல்லாஹ் அடியார்கள் மீது வைத்துள்ள அன்பு: -

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :உமர் இப்னு கத்தாப் (ரலி), ஆதாரம் : புகாரி.

பாவங்களிலேயே மிகப் பெரியது எது?

நான், ‘இறைத்தூதர் அவர்களே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். ‘உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்’ என்று பதிலளித்தார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்றேன். ‘உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!

‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். அறிவிப்பவர் :ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி.

கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவரின் உன்னத நிலை!

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்), ஆதாரம் : புகாரி.

கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்: -

(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரைப் பேணுவதின் முக்கியத்துவம்: -

“அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரை துண்புறுத்துபவன் இறை நம்பிக்கையாளரேயல்ல!

‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அபூ ஷுரைஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரின் அன்பளிப்பை அற்பமாக கருதாதே!

‘முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

Wednesday, March 18, 2009

மக்கள் நலன் நாடுவோரே சிந்திப்பீர், சுதாரிப்பீர்!

மக்கள் நலன் நாடுவோரே, மனித நேயமிக்கோரே உலகளவில், குறிப்பாக நமது தாய்த் திருநாடு இந்தியாவில் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களையும், அடாத செயல்களின் அக்கிரமங்களையும், கண்டுதான் வருகிறீர்கள்.

மனிதன் காட்டுமிராண்டி அநாகரீக வாழ்வை விட்டு முன்னேறி வருகிறான் என பெருமை பேசுகிறோம். அதற்கு மாறாக அநியாயங்களும், அட்டூழியங்களும், அக்கிரம அராஜக செயல்களும், வன்முறைச் செயல்களும், தீவிரவாதச் செயல்களும், மனித வெடிகுண்டு, தற்கொலைப் படை என நாளுக்கு நாள் பெருகி மனிதனாக வாழ வேண்டியவன் இரண்டு கால் மிருகமாக மாறி வருவதையே கண்டு வருகிறீர்கள். மனித உயிர்கள் காக்காய், குருவிகளின் உயிர்களைவிட மலிவாகப் போய்விட்ட சோகத்தையே பார்த்து வருகிறீர்கள்.

மன்னராட்சியை விட, சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியை விட கேடுகெட்ட ஆட்சிகளே ஜனநாயகத்தின் பெயரால் நடைபெற்று வருகின்றன. ஊழல்களுக்கும், லஞ்சத்திற்கும், ஒழுங்கீனங்களுக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது. சட்டங்கள் இயற்றும் மக்கள் மன்றமும், சட்டசபைகளும், மாநகர, நகர சபைகளும் இன்ற அமளிக்காடாக ஆகிவிட்ட கோரக்காட்சிகளையே கண்டு வருகிறார்கள்; வேதனைப்படுகிறீர்கள்!

நீதியை நிலைநாட்ட கடமைப்பட்ட நீதிபதிகள் லஞ்சத்தில் மூழ்கியிருக்கிறார்கள். நீதி விலை பேசப்படுகிறது. நீதியை நிலைநாட்டும் நோக்கத்தடன் சட்டம் படித்து வழக்குரைஞர்களானவர்கள் சட்டத்தை மீறி நடக்கிறார்கள். நீதியை கொலை செய்கிறார்கள். சட்ட ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்ட காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு சீர்கெடவே காரணமாக இருக்கின்றனர். மத்திய, மாநில மந்திரிகளின் நிலையோ சொல்லவே வேண்டியதில்லை. பல தலைமுறைக்கும் அதிகமாக பல லட்சம் கோடி சொத்துக்களைக் குவித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வருகிறார்கள். பேராசை அவர்களை பேயாக்குகிறது.

அரசு அதிகாரிகளின் நிலையும் இதுதான். லஞ்சத்திலேயே முங்கிக் குளிக்கிறார்கள். அரசுகள் நடத்தும் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நிலையும் அப்படியே.

அரசுகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் நிலையோ சொல்லி மாளாது. அரசுத் துறைகள்தான் இப்படி ஊழல்களிலும் லஞ்சத்திலும் சீர்கெட்டுக் கிடக்கின்றன என்றால், தனியார்கள் நடத்தும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் நிலை அதைவிட மோசமாக இருக்கிறது. பெரும் பெரும் பண முதலைகள் நடத்தும் நிறுவனங்களிலும் ஒழுங்கீனங்கள் மலிந்து காணப்படுகின்றன. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாட்டை ஆளவில்லை. அவர்கள் அனைவரும் இந்தப் பெருங்கொண்ட பண முதலைகளின் பைக்குள்ளே அடக்கமாகிவிட்டார்கள். எனவே பெரும் பணம் படைத்தவர்கள் மேலும் மேலும் பல தலைமுறைகளுக்குக் கோடி கோடியாக பணம் சேர்க்கவும். அடிமட்ட மக்கள் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கே ஆலாய்ப் பறந்து அல்லலுறவும் நேரிடுகிறது.

வியாபாரிகளிலிருந்து, தொழில்கள் நடத்துவோர்களிலிருந்து யாருமே நேர்மையாக, ஒழுங்காக, நடக்க முடியாத நிலையில் சீர்கேடுகளும், ஊழல்களும், லஞ்சமும், ஒழுக்கக் கேடுகளும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. ஊழலற்ற நேர்மையானவர்கள் பதவியில் இருக்க முடியாத ஆபத்தான நிலை! ஆம்! மனித வர்க்கமே நிம்மதி இழந்து நிலைதடுமாறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குரிய நிவாரணங்களையும், கண்டறிந்து மக்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ வழி காண வேண்டும். இது மக்கள் நலன் நாடுவோரின் தலையாய பணி.

மக்களின் அமைதி வாழ்க்கையை சீர்குலைத்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதில் முதலிடத்தை வகிப்பவர்கள் ஆன்மீகத்திற்கு வழிகாட்டிகள் எனக் கூறிக் கொண்டு, மனிதனைப் படைத்த இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டுள்ள புரோகிதர்களான மதகுருமார்கள். இவர்களே பல கடவுள் கொள்கையைப் புகுத்தி மூட நம்பிக்கைகளிலும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களிலும், மூடத்தனமாக வணக்க வழிபாடுகளிலும், அறிவுக்கே பொருந்தாத அனாச்சாரங்களிலும் மக்களை மூழ்கச் செய்து அவர்கள் கஷ்டப்பட்டு ஈட்டும் பொருளை தவறான முறையில் அபகரித்துச் சீரழிப்பதுடன் அவர்களும் உண்டு கொழுக்கிறார்கள்.

நாங்கள்தான் கடவுளின் பிரதிநிதிகள், மோட்சத்திற்கு வழிகாட்டுகிறவர்கள், நேரான வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கிறவர்கள் என பொய்யாகப் பிதற்றிக் கொண்டு மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் இவர்களைவிட ஏமாற்றுப் பேர்வழிகள், மோசடியாளர்கள், பக்கா திருடர்கள், மனித விரோதிகள் வேறு யாரும் இல்லை.

இந்தப் புரோகிதர்களுக்கு மனிதன் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே அணுவளவும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். இந்த மதப் புரோகிதர்கள் சட்ட விரோதமாக அனைத்து சமுதாயங்களிலும் புகுந்து கொண்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வயிறு வளர்க்கும் சண்டாளர்கள்; கொடியவர்கள். இந்த மதப் புரோகிதர்களின் துர்போதனைகள் காரணமாகவே பல மதங்களும், பலவித மூட நம்பிக்கைகளும், அனாச்சாரங்களும், பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாத பலவித மூடத்தனமான வணக்க வழிபாடுகளும் மக்களிடையே மலிந்து காணப்படுகின்றன.

இந்த முட்டாள் மதப்புரோகிதர்களின் வழிகெட்ட போதனைகளை ஏற்று, எவ்வளவு கொடூர பாவச் செயல்களைச் செய்தாலும், அவை மூலம் பொருளீட்டினாலும் அவற்றிற்குப் பரிகாரமாக இந்த மதக் குருமார்களுக்கு ஒரு பங்கும், கோவில், சர்ச், தர்கா, போன்றவற்றில் காணப்படும் உண்டியல்களில் ஒரு பங்கும் போட்டுவிட்டு, சில மூடச் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்தால் போதும், பாவ விமோசனம் பெற்று விடுவோம் என்ற மூட நம்பிக்கையில் பெருங்கொண்ட மக்கள் பாவங்களிலும் அட்டூழியங்களிலும் ஈடுபட்டு பணத்தை கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கின்றார்கள். அனைத்துத் துறைகளிலும் இப்படிப்பட்டவர்கள் நிறைந்து காணப்படுவதால் அனைத்துத் துறைகளும் சீர்கெட்டு சீரழிந்து காணப்படுகின்றன.

ஒரே கடவுள் பல கடவுள்களாக்கி அக்கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் இந்த மதப் புரோகிதர்களின் வஞ்சகச் செயல்களை கண்ட சகிக்காத போலி பகுத்தறிவாளர்கள் தாங்கள் தான் பகுத்தறிவாளர்கள், சுய மரியாதைக்காரர்கள் என்று கூறிக் கொண்டு, பொய்க் கடவுள்களையும், அப்பொய்க் கடவுள்களை போதிக்கும் மதகுருமார்களையும் ஒழித்துக் கட்டுவதற்கு மாறாக, படைத்த ஒரேயொரு இறைவனையும் ஒழித்துக் கட்டுவதாகக் கூறிக்கொண்டு தங்களால் முடியாத காரியத்தில் ஈடுபட்டு வழிகெடுகிறார்கள். ஐம்புலன்களை கொண்டு மட்டுமே செயல்படும் பகுத்தறிவுக்கு எட்டாத அபவ்தீக ஓரிறைவனோ, மறுமையோ இல்லை என்று மூடத்தனமாக மக்களுக்குப் போதித்து வருகின்றனர். அதன் விளைவு இறைவனோ, தங்களின் அடாத செயல்களுக்குரிய தண்டனையோ, மறமையோ இல்லை எனும் போது, தங்களை வருத்தி மற்றவர்களக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்? அடாத செயல்கள் செய்வது கொண்டே இவ்வுலகில் சபீட்சமாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் வாழ முடியும். பஞ்சமா கொடிய குற்றங்களைச் செய்தாலும், அரசுகளையும், அரசு அதிகாரிகளையும், நீதிபதிகளையும், கொள்ளை அடித்து கோடி கோடியாக சேர்ப்பதில் ஒரு பகுதியைக் கொடுத்து ஏமாற்றித் தப்பித்து விடமுடியும் என்ற அசாதரண துணிச்சலில் அனைத்து அடாவடிகளிலும், அநியாயங்களிலும் ஈடுபடுகின்றனர். கடவுள் மற்றும் மறுமை பற்றிய அச்சம் இல்லாததால் அரசும், அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும் பணத்திற்கு அடிபணிந்து இப்படிப்பட்டவர்களுக்குத் துணை போவது இயற்கைதானே! கடவுளின் பெயரால் மக்களை வஞ்சிக்கும் மத குருமார்களான புரோகிதர்களுக்கு உலகின் சீர்கேட்டில் எந்த அளவு பங்கு உண்டோ அதேபோல் ஓரிறைவனையும், மறுமையையும், தீச்செயல்களுக்குரிய மறுமைத் தண்டனைகளையும், மறுக்கும் நாத்திகர்களக்கும் உலகின் சீர்கெட்டில் அதே அளவு பங்கு உண்டு.

மூன்றாவதாக ஆன்மீகத்தில் இடைத்தரகர்களாக மத குருமார்கள் திருட்டுத்தனமாக புகுவது போல், அரசியல் இடைத்தரகர்களாக அரசியல் புரோகிதர்கள் புகுந்து கொண்டு மக்களை வஞ்சித்து வயிறு வளர்க்கிறார்கள். ஆன்மீகமாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் சேவை மனதுடன் தொண்டு செய்பவர்கள் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும். ஆன்மீகத்தையும், அரசியலையும் தொப்பையை நிறைக்கும் தொழிலாகக் கொள்கிறவர்கள் ஒருபோதும் நேர்மையாக நடக்க முடியாது. இந்த அரசியல் புரோகிதர்களில் ஆத்திகர்களும் உண்டு. நாத்திகர்களும் உண்டு.

மதப் புரோகிதர்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றவதைக் கண்டு வெறுப்புற்று பல கடவுள் கொள்கையை ஒழிப்பதற்கு மாறாக ஓரிறைவனை மறுக்கும் நாத்திகர்கள் இங்கு அரசியல் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதில் வெறுப்புற்று அரசியல் வேண்டாம் என்று சொல்வதில்லை. ஆம்! மக்களுக்கு மிகமிகத் தேவையானவற்றில் தான் இடைத்தரகர்கள் புகுந்து கொண்டு, மக்களை ஏமாற்றி வஞ்சிப்பார்கள் என்ற பேருண்மையை, உணர முடியாமல்தான் தங்களை பகுத்தறிவாளர்கள் என்று பீற்றிக் கொள்ளும் நாத்திகர்கள் இருக்கிறார்கள்.

மனித குலத்தை வஞ்சிக்கும் இம்முத்தரப்பாரையும் சினிமா துறை(வெள்ளித்திரை, சின்னத்திரை) போற்றி வளர்த்து வருகிறது. இம்முத்தரப்பாரும் சினிமா துறையைப் பேணி வளர்த்து வருகிறார்கள்.

ஆக ஆத்திகத்தின் பேரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதகுருமார்களிடமிருந்தும், நாத்திகத்தின் பேரால் ஓரிறைவனையும் மறுக்கும் போலி பகுத்தறிவாளர்களிடமிருந்தும், அரசியல் இடைத் தரகர்களான அரசியல் புரோகிதர்களிடமிருந்தும் மக்கள் விடுபட்டு, தங்களைப் படைத்த ஓரிறைவனை மட்டும் உறுதியாக நம்பி ஏற்று அந்த இறைவன் முன்னர் இறக்கிய அனைத்து தற்காலிக நெறி நூல்களையும்(வேதங்கள்) அரசு பழைய காகித நாணயங்களை (Currency) இரத்து செய்துவிட்டு புதிய காகித நாணயங்களை (Currency) அமுல்படுத்தவது போல் இரத்து செய்துவிட்டு இறுதியாக இறக்கியருளிய இறுதியும், உலக அழியும் நாள் வரை நிலைத்திருக்கும் நன் நெறிநூல் அல்குர்ஆனை பற்றிப் பிடித்து அதிலுள்ள வழிகாட்டல்படி மனிதகுலம் நடக்க முன்வந்தால் மட்டுமே, மனித குலம் இன்றிருக்கும் பேரழிவிலிருந்து விடுபட முடியும். மக்கள் நலன் நாடுவோரே சிந்தியுங்கள்! சுதாரியுங்கள்!



நன்றி: அந்நஜாத் மார்ச் 2009

Sunday, March 15, 2009

ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.

ஜின்கள் என்று ஒரு படைப்பு இருப்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த அளவிற்கு ஏராளமான சான்றுகள் அவைப் பற்றி உள்ளன.

எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களையும் - ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

இந்த வசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டு நடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும் ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்பு இருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும் இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மனிதர்களை இறைவன் படைக்கும் முன்பே ஜின் இனத்தை இறைவன் படைத்துவிட்டான். மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன்(இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)

இந்த இனம் மனிதர்களுக்கு முன்பே பூமியில் வாழ்ந்ததா...என்றால் சிலர் அப்படிக் கூறினாலும் அதற்கு தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆதம் (அலை) படைக்கப்பட்டு அவருக்கு ஸூஜூது செய்ய இறைவன் கட்டளையிட்டபோது ஷெய்த்தான் மறுத்து ஆணவம் கொண்டான் என்பதை நாம் அறிவோம். இப்லீஸ் - ஷெய்த்தான் போன்ற பெயர்களால் குறிப்படப்படும் அந்த மனிதமகா எதிரிகள் தனி படைப்பல்ல அவைகளும் ஜின் இனத்தை சார்ந்தவைகள்தான்.

(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50)

ஆதமுக்கு ஏன் ஸஜ்தா செய்யவில்லை என்பதற்கு ஷெய்த்தான் எடுத்து வைத்த வாதம், தான் ஜின் இனத்தை சார்ந்தவன் என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

'நான் உனக்கு கட்டளையிட்ட போது நீ ஆதமுக்கு ஸஜ்தா செய்யாமல் உன்னை தடுத்தது எது.. என்று இறைவன் கேட்க, நான் ஆதமைவிட மேலானவன் நீ என்னை நெருப்பினால் படைத்தாய். அவரை மண்ணினால் படைத்தாய் என்று கூறினான். (அல் குர்ஆன் 7:12)

நான் நெருப்பால் படைக்கப்பட்டவன் என்று ஷெய்த்தான் சொன்னதிலிருந்து ஷெய்த்தானியக் கூட்டம் முழுவதும் ஜின் இனத்தை சேர்ந்தவைதான் என்பது தெளிவாகின்றது.

இந்த ஜின் கூட்டம் முழுவதும் மலக்குகளுடன் இருந்துள்ளார்கள் என்ற விபரத்தை ஆதமுக்கு ஸூஜூது செய்யுங்கள் என்று கூறும் இறைவசனங்களிலிருந்து - சிந்திக்கும் போது - விளங்கலாம்.

மலக்குகளை நோக்கி நாம் சொன்னோம் ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று. (அல் குர்ஆன் 2:34 இன்னும் பல இடங்களில் இந்த சம்பவம் இடம் பெறுகிறது)

நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள் என்று நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 2:38)

'அனைவரும் இறங்கி விடுங்கள்' என்ற வார்த்தை மலக்குகளை விடுத்து மற்ற ஜின் இனத்திற்கும் ஆதம் - ஹவ்வா ஆகிய மனித இனத்தவர்களுக்கும் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.

இதுவரை நாம் கண்ட விபரத்தின் சுருக்கும் என்னவென்றால்

மனிதர்களுக்கு முன்பே ஜின் இனம் படைக்கப்பட்டு விட்டது

அவர்கள் மலக்குகளுடனே இருந்துள்ளார்கள்.

ஷெய்த்தான் - இப்லீஸ் போன்ற தீய சக்திகள் அனைத்தும் ஜின் இனத்தை சார்ந்தவையாகும்.

ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும்.

ஆதம் ஹவ்வா இருவருடனும் சேர்ந்து இவர்கள் பூமிக்கு இறங்குகிறார்கள்.

இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன.

அவர்களுக்கும் இறைத்தூதர்கள் உள்ளனர்

(மறுமை நாளில் இறைவன் ஜின் - மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் - மனித கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா...என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)

ஜின் கூட்டத்தாரே உங்களிலிருந்தே உங்களுக்கு தூதர் வந்துள்ளார் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஜின்களுக்கு ஜின் இனத்திலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை விளங்கலாம். ஆனாலும் இவர்கள் மனித தூதர்கள் சிலரிடமும் அவர்கள் கொண்டுவந்த வேதத்திலும் பாடம் கற்றுள்ளார்கள்.

இவர்களுக்கு ஜின் இனத்திலிருந்து தூதர்கள் வந்தார்கள் என்பது முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு தான். முஹம்மத்(ஸல்) மனித குலத்திற்குறிய தூதராக மட்டுமில்லாமல் ஜின் இனத்திற்குறிய தூதராகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த குர்ஆன் மனித - ஜின் ஆகிய இரு இனங்களுக்கும் பொதுவானதாகும்.

இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் - வேதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்தே மனித சமூகம் போன்று ஜின் இனமும் ஒரு பெரிய சமூகமாக ஆண் - பெண், சந்ததி பெருக்கம், பிறப்பு வாழ்வு, இறப்பு என்று மனித இயல்பில் பெரும் பகுதி கொடுக்கப்பட்டவை ஹராம் - ஹலாலுக்கு உட்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்களுடன் நடந்த சந்திப்பு.

(நபியே) இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம் திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம் சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அல் குர்ஆன் 46:29)

(ஜின்கள்) கூறினார்கள் 'எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் - நேரான மார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது. (அல் குர்ஆன் 46:30)

எங்களுடைய கூட்டத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து அவரை ஈமான்(நம்பிக்கைக்) கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பான். நோவினைத் தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான் என்றும் கூறினார்கள் (அல் குர்ஆன் 46:31)

ஆனால் எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்கவில்லையோ அவரால் பூமியில் (சத்தியத்தை)இயலாமலாக்க முடியாது. அவனையன்றி பாதுகாப்போர் எவருமில்லை. (அல் குர்ஆன் 46:32)

இது நபி(ஸல்) தாயிபிலிருந்து திரும்பும் வழியில் குர்ஆனை ஓதி வரும் போது ஜின்கள் செவியேற்று அவர்களை விசுவாசித்த சம்பவமாகும். இந்த சந்தர்பத்தில் ஜின்கள் தம்மிடம் வந்ததையோ - குர்ஆனை சேவியேற்று சென்றதையோ நபி(ஸல்) அறியவில்லை. பின்னர் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். இதை 72 வது அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்திலிருந்து அறியலாம். மேலும் அந்த அத்தியாயத்தில் இறைவனுக்கு இணை கற்பித்து முஷ்ரிக்குகளாகவும் - காபிர்களாகவும் இருக்கும் ஜின்கள் பற்றியும் படைத்த ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு ஏகத்துவத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழும் ஜின்கள் பற்றிய விபரமும் கூறப்பட்டுள்ளது.

46:30 வது வசனத்தில் மூஸாவிற்கு பிறகு இது இறக்கப்பட்டுள்ளது என்ற ஜின்களின் கூற்றிலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள முக்கிய நபிமார்களையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் ஜின்கள் அறிந்திருந்தனர் என்பதையும் அவற்றின் மீது நல்ல ஜின்கள் விசுவாசம் கொண்டிருக்கக் கூடும் என்பதையும் விளங்கலாம்.

ஜின்களுக்கும் தூதுத்துவ செய்தியை எடுத்துக் கூறும் பொறுப்பு நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டப் பிறகு ஜின்களின் பிரதிநிதிகள் நபி(ஸல்) அவர்களை சந்தித்து - அழைத்து சென்ற விபரம் முஸ்லிம் - திர்மிதி - அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஜின்கள் நபி(ஸல்) அவர்களை சந்தித்த இரவில் அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் - ஜின்களின் காலடி சுவடுகள் - அவர்கள் சமைத்த பாத்திரங்கள் - அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள். (திர்மிதி 3311)

இந்த சந்திப்பிற்கு பிறகு தான் நபி(ஸல்) கீழ் கண்ட அறிவிப்பை செய்கிறார்கள்.

நீங்கள் மல ஜலம் கழித்தால் விட்டை மற்றும் எலும்பால் சுத்தம் செய்யாதீர்கள் ஏனெனில் அவை உங்கள் சகோதர ஜின்களின் உணவாகும். (அபூஹூரைரா - இப்னு உமர் - ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவித்து இதில் உடன் படுகிறார்கள். முஸ்லிம் - திர்மிதி - அபூதாவூத் - ஹாக்கிம்)

ஜின்களும் - சுலைமான் (அலை) அவர்களும்.

தாவூத்(அலை) அவர்களின் மகனான சுலைமான்(அலை) அவர்களுக்கு இறைவன் வல்லமை மிக்க அரசாங்கத்தையும் - ஆற்றல் மிகுந்த வலிமையையும் - மெய் சிலிர்க்கக் கூடிய மொழியாற்றலையும் கொடுத்திருந்தான். இவற்றிர்க்குரிய ஆதாரங்களை முதலில் அறிவோம்.

சுலைமானுக்கு நாம் கடுமையாக வீசும் காற்றையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அது அவரது ஏவலின் படி பாக்கியம் பொருந்திய பூமிகளுக்கு அவரை எடுத்துச் செல்லும். (அல் குர்ஆன் 21:81)

ஷைத்தான்களிலிருந்து கடலில் மூழ்கி(முத்தெடுத்து) வரக் கூடியவர்களை வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 21:82)

சுலைமானுக்கு ஜின்கள் - மனிதர்கள் - பறவைகள் ஆகியவற்றிலிந்து படைகள் திரட்டப்பட்டு அவை தனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. (அல் குர்ஆன் 27:17)

எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஒரு எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ஓ! எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்துக் கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாத விதத்தில் உங்களை நசுக்கி விடாதிருக்க... என்று கூறிற்று. இதைக் கேட்டு (சுலைமான்) அவர் புன்னகைத்தார் (அல் குர்ஆன் 27:18 - 19)

சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அதன் காலை பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகி ஓட செய்தோம். ஜின்களில் உழைப்பவற்றிலிருந்து அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 34:14)

இந்த வசனங்கள் அனைத்தும் சுலைமான்(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அருட்கொடையின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அவருக்கு மட்டும் இப்படிப்பட்ட அருட்கொடை கிடைக்கக் காரணம் என்ன?

அவர்கள் இறைவனிடம் முறையிட்ட முறையீடுதான்!

எனக்கு பின்னர் எவருமே அடைய முடியாத ஒரு அரசாங்கத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய் என்று கூறினார் (அல் குர்ஆன் 38:35)

சுலைமான் நபி அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அவர்களுக்கு பின் எவருமே அடைய முடியாத பெரும் அரசாங்கத்தை அவர்களுக்கு வழங்கினான். அதற்குரிய ஆதாரங்களைத் தான் மேலே கண்டோம். அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததில் ஜின்களும் அடங்கும். பலசாலியான ஜின்கள் - முத்துகுளிக்கும் ஷைய்த்தான்கள் எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்தன.

வீட்டிற்கு வரும் - ஜின்கள் - பாம்புகள்

ஜின் என்ற அரபு பதத்திற்கு - மறைவானது - என்று பொருள். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிர்க்கு அந்தப் பெயர் வந்தது. சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம். அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப் பெற்றதாகும்.

ஜின்கள் மூன்றுவகைப்படும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

1) பாம்பு வடிவில் உள்ளவைகள். 2) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழ்பவை 3) ஆகாயத்தில் பறப்பவை. (அபூ தஅல்பா (ரலி) ஹாக்கிம்)

பொதுவாக பாம்பினத்தை ஜின்கள் என்று குறிப்பிடலாம் இதற்கு குர்ஆனில் ஆதாரம் கிடைக்கிறது. (பார்க்க 27:10)

பாம்புகள் அனைத்தும் ஜின்கள் இல்லை ஆனால் ஜின்களில் சிலது பாம்புகளிலும் அடங்கும். இதை கருத்தில் கொண்டுதான் வீட்டில் உலவும் பாம்புகளை எடுத்தவுடன் அடித்து விட வேண்டாம் ஏனெனில் அவை ஜின்களாகக் கூட இருக்கலாம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

ஜின்கள் கடும் விஷம் உள்ள பாம்புகளின் உருவில் இருக்காது என்பதால் கடும் விஷம் உள்ள பாம்புகளை எங்கு கண்டாலும் உடனே அடித்து விட வேண்டும்.

நபி(ஸல்) மேடையில் நின்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ''பாம்புகளைக் கொள்ளுங்கள் - முதுகில் வெள்ளைக் கோடுள்ள பாம்பையும் - குட்டையான சிதைந்த வாலுள்ள பாம்பையும் கொள்ளுங்கள் அவை இரண்டும் கண் பார்வையை அழித்து விடும்'' என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 3297)

விஷமுள்ள பாம்புகளை நபி(ஸல்) குறிப்பட்டுக் காட்டியதிலிருந்து அத்தகையப் பாம்புகளை காலம் கடத்தாமல் அடித்து விட வேண்டும். நல்லப் பாம்பை அடிக்காமல் விட்டு விட வேண்டும் என்பதெல்லாம் இந்த ஹதீஸ் கட்டுப்படுத்தாது. அவை கட்டாயம் அடிக்கப்பட வேண்டிய பாம்புகளாகும்.

வீட்டில் தென்படும் பாம்புகளில் ஜின்களும் அடங்கும் அதனால் அதை உடனே அடிக்காமல் போய்விடு என்று கூறுங்கள் மூன்றுமுறை கூறியும் போகாவிட்டால் அதை அடியுங்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூ லுபாபா(ரலி) புகாரி 3298 - முஸ்லிம்)

பாம்புக்கு காது கேட்குமா... தமிழ் அறியுமா... என்றெல்லாம் அலச வேண்டிய அவசியமல்லை. பாம்புக்கு செவி புலன் கிடையாது என்பது உண்மைதான். பாம்புக்கு தான் செவி புலன் கிடையாதே தவிர பாம்பு வடிவில் வரும் ஜின்னுக்கு செவிபுலன் உண்டு. ''போய்விடு'' என்ற அறிவிப்பு ஜின்னுக்குத் தானே தவிர பாம்புக்கு அல்ல. நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் பொய் இருக்காது என்பதால் எந்த மொழியில் சொன்னாலும் ஜின்களுக்கு விளங்கும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுலைமானுக்கு கட்டுப்பட்டதாக இருந்தால் போய் விடு என்று ஹதீஸ் இருப்பதாக நாம் அறிந்தவரை தெரியவில்லை. சிந்தித்துப் பார்க்கும் போது அவ்வாறு நபி(ஸல்) சொல்லி இருக்க முடியாது என்று புரிந்துக் கொள்ளலாம்.

சுலைமான்(அலை) அவர்களுக்கு ஜின்கள் கட்டுப்பட்டன என்பது உண்மை. இந்த கட்டுப்பாடு எதுவரை நீடித்தது? அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தான் இந்த கட்டுப்பாடு நீடித்தது. இதை நாமாக சொல்லவில்லை. குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.

(சுலைமான்) அவர் மீது நாம் மரணத்தை விதித்த போது அவரது கைத் தடியை அறித்த நிலத்து பூச்சி (கரையான்)யைத் தவிர வேறெதுவும் ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே 'மறைவான விஷயங்களை நாம் அறிந்திருந்தால் இழிவு தரும் இந்த கடின வேலையில் நீடித்திருக்கத் தேவையில்லை என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்குர்ஆன் 34:14)

சுலைமான் (அலை) இறந்து அது ஜின்களுக்கு தெரிய வந்ததும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து ஜின்கள் விடுபட்டு விட்டன என்பதை இந்த வசனம் தெளிவாக அறிவித்து விடுகிறது. எனவே இன்றைக்கும் ஜின்கள் சுலைமானுக்கு (அலை) அவர்களுக்கு கட்டுப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். (ஜின்கள் கட்டுப்படுவதாக இருந்தால் அவற்றிர்க்கு கட்டளையிட சுலைமான் (அலை) உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இல்லையென்றால் ஜின்களுக்கு கட்டளையிடுவது யார்?)

ஒரு வேளை இன்றைக்கும் கட்டுப்படுவதாகவே வைத்துக் கொள்வோம் - ஒரு பேச்சுக்குதான் - வைத்துக் கொள்வோம்.

பிறரது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிர்க்கு நாம் எப்படி ஆர்டர் போட முடியும்.

ஒரு பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் ஆசிரியரைப் பார்த்து மாணவன் நீங்கள் தலைமையாசிரியருக்கு கட்டுப்பட்டவராக இருந்தால் எனக்கு அதிக மார்க் போடுங்கள் என்கிறான்.

முகலாய மன்னர்களுக்கு நீங்கள் கட்டுப்படுபவர்களாக இருந்தால் எங்களுக்கு வரி கொடுங்கள் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள்.

இதுவெல்லம் அறிவுப்பூர்வமான வாதம் என்று யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சுலைமான்(அலை) அவர்கள் பற்றிய நிலையும் அப்படித்தான். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் யாராவது இப்படி சொல்லி இருந்தாலாவது ஓரளவு நியாயம் இருக்கும். அவர்கள் மவுத்தாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி சொல்வது எந்த வகையிலும் பொருந்தவில்லை.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்கள் மட்டும் வசப்பட்டு இருக்கவில்லை. காற்றும் வசப்பட்டிருந்தது. இன்றைக்கு வேகமாக புயல் காற்று வீசும் போது ''நீ சுலைமானுக்கு கட்டுப்பட்டால் வீசாமல் நின்று விடு'' என்று யாராவது சொல்ல முடியுமா... ஜின்களுக்கு ஒரு நியாயம் காற்றுக்கு ஒரு நியாயம் கற்பிக்க முடியாது.ஏனெனில் இரண்டும் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டது தான்.

சுலைமானுக்கு கட்டுப்பட்டால் என்று ஹதீஸ் இருப்பதாக யாராவது கூறினால் ஹதீஸ் என்னையும் அது இடம் பெறும் நூலையும் கேளுங்கள் முடிந்தால் அந்த காப்பியை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஜின்கள் பற்றி ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளோம். ஜின்களை வசப்படுத்த முடியுமா... போன்ற மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்கள் எங்களுக்கு எழுதலாம். (இறைவன் மிக்க அறிந்தவனாக இருக்கிறான்)

Sunday, March 8, 2009

இஸ்லாத்தை தனது வாழ்க்கையாக எடுத்துக் கொண்ட ஜமைகா நாட்டைச் சேர்ந்த அபூ அமீனாஹ் பிலால் ஃபிலிப்ஸ் எழுதியது.

இஸ்லாம்

இஸ்லாம் என்பது ஓர் அறபுச் சொல். அதன் கருத்து என்ன என அறிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம்.
இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களும். ஒன்றில் தனிப்பட்ட ஒருவரின் பெயரிலோ அல்லது ஒரு சமூகத்தின் பெயரிலோ இலங்கி வருவதை நாம் காண முடிகின்றது. கிறிஸ்தவ மதம் இயேசு கிறிஸ்துவின் பெயரிலும், பௌத்த மதம் மகான் புத்தர் பெயரிலும், கொன்பியூஸியஸ் மதம் கொன்பியூஸியஸ் பெயரிலும், மார்க்சியவாதம் கால்மார்க்ஸ் பெயரிலும் இலங்கி வருகின்றன. யூத மதம் யூதியா என்ற நாட்டில் யூத கோத்திரத்தில் தோன்றியதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. அதேபோன்று, இந்து மதம் இந்தியாவில் இந்து சமூகத்தில் தோற்றம் பெற்றதால் அதற்கு அப்பெயர் வந்தது.
எனினும், இஸ்லாம் தனிப்பட்ட ஒருவரின் பெயரிலோ, அல்லது ஏதாவதொரு நாடு, சமூகம் என்ற பெயரிலோ தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. இஸ்லாம், இந்தப் பிரபஞ்சத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வினால் மனிதனுக்குத் தரப்பட்ட சத்திய மார்க்கமாகும். அதன் அடிப்படை நோக்கம் முழு மனித சமுதாயமும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதாகும்.
இஸ்லாம் என்ற அறபுச் சொல்லுக்கு அடிபணிதல், கீழ்ப்படிதல், இணங்கி நடத்தல் போன்ற கருத்துக்கள் உண்டு. இக்கருத்துக்களுக்கமைய யாரேனும் ஒருவர் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, அவனுக்கு மட்டும் வணங்கி, வழிபட்டு, அவன் காட்டித் தந்த வழிமுறைப்படி வாழ்ந்தால் அவர் ஒரு முஸ்லிமேயாவார். இஸ்லாம் என்ற சொல்லில் சமாதானம் என்ற கருத்தும் உண்டு. எனவே, எவனொருவன் அல்லாஹ்வுக்கு முழுமையாகவே அமைதியை, சமாதானத்தை அடைவார் என்பது இதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.
இஸ்லாம், ஏழாம் நூற்றாண்டில், அறபு நாட்டில் வாழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்களால் கொண்டுவரப்பட்ட மார்க்கம் அன்று, அது அவர்கள் மூலம் இறுதியாகத் தரப்பட்டது உண்மையே. இஸ்லாம் முதன் முதல் அருளப்பட்டது உலகின் முதல் மனிதரும் முதல் இறை தூதருமான ஆதம் (அலை) அவர்களுக்கேயாகும். அவர்களில் இருந்து ஆரம்பமான மனித வர்க்கத்தில் தோன்றிய எல்லா இறைத் தூதர்களினதும் மார்க்கம் இஸ்லாமேயாகும்.
அல்லாஹ்வால் அருளப்பட்ட இஸ்லாத்திற்கு ஷஇஸ்லாம்| என்று பெயரிடப்பட்டது மனிதனால் அல்ல. அல்லாஹ்வால் வைக்கப்பட்ட சிறப்புப் பெயராகும். அதுபற்றி அல்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

ஷஷஇன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கிவிட்டேன், மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்|| (5:3)

ஷஷஇன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒரு போதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது|| (3:85)

ஷஷஇப்றாஹீம் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால், அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். (3:67)
மூஸா (மோஸஸ்) நபியவர்களின் வழி நடந்தவர்கள், அல்லது அவர்களது வழித் தோன்றல்களை விளித்து. ஷஉங்கள் மதம் யூத மதமே| என்று அல்லாஹ் மொழிந்ததாக பைபிளில் எங்கும் காணப்படவில்லை. அதே போன்று ஈஸா (இயேசு கிறிஸ்து) நபியவர்களது வழியில் சென்றவர்களது மார்க்கம் ஷகிறிஸ்தவ மார்க்கம்| எனவும் கூறப்படவில்லை.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கின்றது. அதுதான் ஷக்ரய்ஸ்ட்| என்றும் ஷஜீஸஸ்| என்றும் உள்ள பெயர்கள், இயேசு நாதருடையனவா என்பதாகும். உண்மையில், அவை அவர்களுக்குரிய பெயர்களேயல்ல. ஷக்ரய்ஸட்| என்பது ஷக்ரிஸ்டோஸ்| என்ற கிரேக்க சொல்லில் இருந்து பிறந்ததே. ஷக்ரிஸ்டோஸ்| என்றால் துன்பத்திற்கு இலக்கானவர்| என்று பொருள்படும். ஷக்ரய்ஸ்ட்| என்பது ஷமெஸய்யாஹ்| என்ற ஹீப்ரு பெயரின் கிரேக்க மொழி பெயர்ப்பாகும். மேலும் ஷஜுஸஸ் என்பதானது ஈஸா என்ற ஹீப்ரு பெயரின் லத்தீன் மொழிபெயர்ப்பாகும்.
எது எப்படியிருப்பினும், வசதியைக் கருதி இச்சிறிய நூலில் நபி ஈஸா (அலை) அவர்களது பெயரை இயேசு நாதர் என்றே குறிப்பிட்டுச் சொல்ல விழைகின்றேன்.
உலகில் தோன்றிய ஏனைய இறைத் தூதர்களைப் போன்று இயேசு நாதரும் தமது சீடர்களுக்குப் போதித்தது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் அடிபணிந்து நடக்கும்படியே. மேலும், மனிதன் தனது மனதால் உருவாக்கிக் கொண்ட தவறான தெய்வ நம்பிக்கைகளிலிருந்து தூர விலகி நிற்கும்படியும் அவர்கள் போதனை புரிந்தார்கள்.
பைபிளின் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஷஷசுவனத்தில் போன்று இங்கும் உன் கட்டளைகளுக்கேற்ப செயற்படுவோமாக|| என்று பிரார்த்தனை செய்யும்படி அவர் தனது சீடர்களுக்கு அறிவு புகட்டினார்.

இஸ்லாத்தின் தூது
அல்லாஹ்வின் அருள் வழி இஸ்லாத்தின் அடிப்படைத் தூதானது முழு மனித சமுதாயமும் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட வேண்டும், அவனது கட்டளைகளை ஏற்க வேண்டும், அவற்றுக்கமைய வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வாழ வேண்டும் என்பதாகும்.
மனிதன் அல்லாஹ்வுக்கன்றி யாரேனும் தனிப்பட்டவர்களுக்கோ, விக்கிரகங்களுக்கோ, குறிப்பிட்ட ஓர் இடத்திற்கோ அல்லது வேறு எதற்குமோ வணங்கி வழிபடுவதிலிருந்து தன்னைத் தடுத்துக் கொள்வது இஸ்லாமாகும்.
இல்வுலகிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வின் படைப்புக்களாகும். எனவே, படைப்புக்களையல்ல, அவற்றைப் படைத்தவனான அல்லாஹ்வை வணங்கி, வழிபடும்படி இஸ்லாம் கூறுகின்றது. மனிதன் வணங்கி வழிப்படத் தகுந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதே போன்று, மனிதனின் பிரார்த்தனைகளுக்குப் பதில் அளிப்பவனும் அவனேயாவான். யாரேனும் ஒருவன் ஒரு மரத்திடம் பிரார்த்தனை புரிந்து, அதற்குப் பதில் கிடைத்தது என்றால் அதன் கருத்து அந்த மரத்திடமிருந்து பதில் கிடைத்தது என்பதல்ல. உண்மை என்னவெனில், அத்தகைய பதிலொன்று கிடைக்க வேண்டும் என்ற இறை நியதியும் சந்தர்ப்பமும் அப்போது அமைந்ததேயாகும். சிலர் ஷஅது அப்படியல்ல| என விவாதிக்கலாம். அத்தகைய விவாதங்கள் கேளிக்குரியனவே. உண்மையில் மரமொன்றுக்கு வணங்குவதாலோ அதனிடம் பிரார்த்தனை புரிவதாலோ எந்தப் பயனுமில்லை.
அது மட்டுமல்ல. இயேசு நாதர், புத்தர், கிருஸ்ணர், புனித க்ரிஸ்டோடர், புனித ஜோட் ஆகியோரிடம் மட்டுமன்றி முஹம்மது (ஸல்) அவர்களிடம் கூட நாம் பிரார்த்தனை செய்து பதில் கிடைக்கப் பெற மாட்டோம். பிரார்த்தனைகளுக்குப் பதில் அளிப்பவன் அல்லாஹ் மட்டுமே. இயேசு நாதர் தனது சீடர்களுக்குப் போதனை புரிந்ததும்ளூ அல்லாஹ்வை விடுத்து தன்னிடம் பிரார்த்தனை புரிதல் ஆகாது என்றேயாகும்.
அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது:

ஷஷஇன்னும், மர்யமுடைய மகன் ஈஸாவே? ஷஅல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்| என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?|| என்று அல்லாஹ் கேட்கும் பொழுது, அவர் ஷஷ நீ மிகவும் தூய்மையானவன், எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை…….|| (5:116)
இயேசு நாதர் தமக்கு தாமே வணக்க வழிபாடுகளை செய்து கொள்ளவில்லை. அவர்கள் கூட அடிபணிந்ததும் வணங்கியதும், வழிபட்டதும் அல்லாஹ் ஒருவனுக்கே. குர்ஆனின் ஷசூரத்துல் பாத்திஹா| எனும் சிறிய அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் இவ்வடிப்படைக் கருத்து அடங்கப் பெற்றுள்ளது.
அவ்வசனம் வருமாறு:

ஷஷ(யா அல்லாஹ்) உன்னையே நாங்கள் வணங்கு (இபாதத் செய்)கிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.||
பரிசுத்த குர்ஆனில் இன்னுமொரு இடத்தில் அல்லாஹ் இவ்வாறு மொழிகின்றான்.

ஷஷஉங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன்.|| (40:60)
அல்லாஹ்வுக்கும் அவனது படைப்புக்களுக்கும் இடையே பாரிய வித்தியாசமொன்று இருப்பதாக இஸ்லாத்தின் தூது நமக்கு அறிவுறுத்துகின்றது. அல்லாஹ் அவனது படைப்போ அல்லது அவனது படைப்பின் ஒரு பகுதியோ அல்ல. அதே போன்று, அவனால் படைக்கப்பட்டவைகளும், அவனோ அவனது ஒரு பகுதியோ அல்ல.
இந்த உண்மை மிகத் தெளிவாகக் காணக்கூடியதாக இருப்பினும், அவனுக்குப் பதிலாக அவனது படைப்புக்களுக்கு வணக்க வழிபாடுகள் செய்வதும், கிரியைகள் செய்வதும் முட்டாள்தனமானது என அத்தகைய செய்கைகளில் ஈடுபட்டிருப்போருக்கு தெரியாதிருப்பது ஆச்சரியமேயாகும். இறைவனின் படைப்புக்களை வணங்கி வழிபடுவோர். ஷஇறைவன் தனது படைப்புக்கள் அனைத்திலும் சங்கமமமாகி இருக்கிறான்| என்றும், ஷஅவனது படைப்புக்கள் சிலவற்றின் மூலம் அவன் எத்தகைய சிரேஷ்டமானவன்| என்றும் அறிய முடிகின்றதால், அவனது படைப்புக்களை வழிபடுவதாகவும், அத்தகைய வழிபாடுகள் இறைவனை வழிபடுவதாகவே அமையும் எனவும் தர்க்கிக்கின்றனர்.
எனினும், இறைத்தூதர்கள் மனிதர்களுக்காக கொண்டுவந்த தூதில், மனிதன் இறைவனுக்கு அல்லாஹ்வுக்கு மட்டுமே தனது வணக்க வழிபாடுகளை செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அவனது படைப்புக்களை வணங்கி வழிப்படுவதிலிருந்து மனிதன் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது. அல்லாஹ் இவ்வாறு மொழிகிறான்.

ஷஷமெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திம் ஷஅல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்| என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பிவைத்தோம்|| (16:36)
ஷகற்பனை மிகுந்த மனிதனின் கைவண்ணத்தில் உருவான சிலைக்கு முன்னால் விழுந்து வணங்கி வழிபடுகிறீர்களே? என்று சிலையை வழிபடும் ஓர்; ஆணிடமோ ஒரு பெண்ணிடமோ கேட்டால், இருவரது விடையும் ஒன்று போல் இருக்கும். அவர்கள் கூறுவதெல்லாம். நாம் கல்லினாலோ, மண்ணினாலோ உருவாக்கப்பட்ட சிலைகளை வணங்குவதும் இல்லை, வழிபடுவதும் இல்லை. மாறாக, அவற்றினூடாக இறைவனையே வணங்கி வழிபடுகின்றோம் என்பதுதான். இக்குகூற்றை மற்றொரு விதத்தில், ஷநாம் அந்தச் சிலைகளை அல்ல, அவற்றைப் பயன்படுத்தி, மனதை ஒருமைப்படுத்தி, இறைவனையே வணங்கி வழிபடுகிறோம்| என்று கூறுவதாகவும் கொள்ள முடியும். இறைவன் தனது படைப்புக்களில் சங்கமமாகியுள்ளான், அவதாரம் எடுக்கின்றான் என்ற கருத்தை ஏற்றவர்கள் இக்கருத்தை ஏற்க முன்வரலாம்.
எனினும், இஸ்லாத்தின் மூலக்கோட்பாடுகளை நன்கு அறிந்து, அதனுடன் நெருங்கிய உறவு கொண்ட எவரும் இக்கருத்தை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
தமக்கு தெய்வீகத்தன்மை இருப்பதாக பிரபல்யப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு யுகத்திலும் தோன்றியவர்கள், ஷமனிதனில் இறைவன் சங்கமமாகி இருக்கிறான்- அவதாரம் எடுக்கின்றான் என்ற தவறான கருத்தையே தமக்காதாரமாகக் கொண்டார்கள். இக்கருத்தை அவர்கள் பொதுப்படையாகக் கூறிக் கொண்டாலும் தனிப்பட்ட முறையில் தன்னுடன் இறைவன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றான்.| என்று கூற சமூகத்தில் தமக்கு விஷேடமான இடத்தைப் பெறமுயன்றார்கள் என்பதைக் காணலாம். ஷநானே இறைவன்| அல்லது ஷநான் இறைவனின் அவதாரம்| எனக் கூறி, மற்றவர்கள் தமக்குக் கட்டுப்பட்டு, வணக்க வழிபாடுகள் செய்ய வேண்டுமெனக் கோரி நின்றனர். இப்படி வாதிட்டு, கோரிக்கை விடுத்த அவர்கள் மறைந்தபின், அவர்களது சீடர்கள் அக்கருத்தை ஏற்றவர்கள் மத்தியில் சிறப்புக்குறியவர்களாக மாறி இன்பமயமான வாழ்வை அமைத்துக் கொண்டனர்.
இஸ்லாத்தின் மூலக் கோட்பாடுகளுடன் மிகச் சாதாரண அளவு அறிவு கொண்ட ஒருவர் கூட, தன்னைப் போன்ற மற்றொரு மனிதரை எக்கட்டத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் வணங்கவோ வழிபடவோ இணங்கமாட்டார் என்பது திண்ணம்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகள் அனைத்தினதும் அடித்தளம் அல்லாஹ்வைப் பற்றிய ஏகத்துவக் கோட்பாடு சார்ந்ததாகும். அது கீழ்க்காணும் சிறிய சொற்றொடரினுள்ளே அடங்கப் பெற்றுள்ளது.
லாஇலாஹ இல்லல்லாஹ்

இதன் கருத்து:
ஷஷஅல்லாஹ்வைத் தவிர வேறு இலாஹ் - இறைவன் இ;லை| என்பதாகும்.
இச்சொற்றொடரை எவர் உள்ளத்தால் ஏற்று, ஷவாழ்வால், நிலைநிறுத்துவேன்| என உறுதிபூண்டு, நாவினால் மொழிந்தால் அவர் ஒரு முஸ்லிமாவார். இஸ்லாத்தை தனது மார்க்கமாக - வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர் ஆவார். இச் சொற்றொடரின் கருத்தை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒருவர் சுவனத்தைப் பெறும் தகுதியுடையவர் ஆவார்.
முஹம்மத ;(ஸல்) அவர்கள் கீழ்க் காணும்வாறு மொழிந்ததாக அபூதர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஷயாரேனும் ஒருவர், அல்லாஹ்வதை; தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறி அதோடு (ஒரு விசுவாசியாக) மரணித்தால் அவர் சுவனம் புகுவார்.| (புஹாரி, முஸ்லிம்)
ஓர் இறைவன் என்ற ரீதியில் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து நடப்பது, அவ்வாறு நடப்பதன் மூலம் அவனது அருளைப் பெற்றுக் கொள்வது, பல தெய்வ வாதத்தையும், பல தெய்வவாதம் புரிபவர்களையும் நிராகரிப்பது என்பன இச்சொற்றொடரில் அடங்கப்பெற்றுள்ளன.

அசத்திய மார்க்கங்களின் தூது
உலகில் பல மதங்கள், தத்துவங்கள், வழிபாட்டு முறைகள், அமைப்புக்கள், பல்வேறு சிந்தனைப் பிரிவுகள் என்பன இருக்கின்றன. இவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளோர் தாம் நேர்வழியில் இருப்பதாகவும், இறைவனின் சத்திய மார்க்கத்தில் இருப்பதாகவுமே கூறுகின்றனர். அப்படியாயின், இவை யாவுமே நேரிய வழியில் இருக்கின்றனவா? அல்லது ஏதாவது ஒரு பிரிவு நேர்வழியில் இருக்கின்றதா? எவ்வாறு தெரிந்து கொள்வது? அதற்கான அளவு கோல்கள் என்ன? போன்ற பல வினாக்கள் எழுவது இயல்பேயாகும்.
இந்த வினாக்களுக்கான விடைகளைப் பெறுவதற்கு ஓர் அழகான வழிமுறை இருக்கின்றது. அதாவது, இந்த மதங்களுள் அல்லது பிரிவுகளுள் மிக அழகான சொற்களைக் கொண்ட கருத்துக்கள் திணிக்கப்பட்டுள்ளளன. அவற்றை நீக்கி அந்த மதங்கள் அல்லது பிரிவுகளின் அடிப்படை நோக்கமும் உண்மையும் என்ன எனப் பார்க்க வேண்டும். அவை வெளிப்படையாகவும் இரகசியமாகவும் எத்தகைய வழிபாட்டு முறைகளின்பால் மனிதனை அழைக்கின்றன என்பதை அறிய முனைதல் வேண்டும்.
அப்பொழுது இந்த அசத்திய மார்க்கங்களும், பிரிவுகளும் இறைவனைப் பற்றிய பொதுவான அடிப்படைக் கருத்துக்கள் பல கொண்டிருப்பதைக் காணலாம். அவையாவன. ஷஎல்லா மனிதர்களும் இறை அவதாரங்களே!, ஷசில குறிப்பிட்ட விஷேட மனிதர்கள் இறை அவதாரம் பெற்றவர்களே! அல்லது ஷமனிதனின் கற்பனா சக்தியிலிருந்து உருவானவனே இறைவன்! என்பனவாகும்.
அசத்திய மதங்கள், இறைவனை அவனது படைப்புக்களின் தோற்றங்களுக்கமைய வழிபட மதங்கள், படைப்புக்களில் அல்லது அவற்றின் சிற்சில பகுதிகளில் தெய்வீகத் தன்மை இருப்பதாகக் கூறியே மக்கள் முன் தமது அழைப்பை சமர்ப்பிக்கின்றன.
உதாரணமாக இயேசு நாதரை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் தமது சீடர்களுக்குக் கட்டளையிட்டது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் வணங்கி வழிபட வேண்டும் என்றே. என்றாலும், அவரைப் பின்பற்றுபவர்களாக இன்று இருப்பவர்கள், அவருக்கு தெய்வீகத் தன்மையைக் கற்பித்து, அவர் பெயரில் சிலைகளை செதுக்கி, அவற்றுக்கு வணங்கி வழிபடுகின்றனர்.
வணக்க வழிபாடுகளின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் நோக்குடன் அசத்திய மதங்கள், மார்க்கங்களின் பால் ஒரு பார்வையைச் செலுத்தினால், அவற்றின் பொய்மையை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். அத்துடன், அம்மதங்களின் இயற்கையான ஆரம்ப நிலை பிறகு எவ்வாறு மாறுபட்டது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
அல்லாஹ் இவ்வாறு மொழிகின்றான்:

ஷஷஅவையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப் ) பெயர்களேயன்றி வேறில்லை, அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை|| (12:40)
எல்லா மதங்களும் நல்லதையே சொல்கின்றன, அறிவு புகட்டுகின்றன. எனவே, குறிப்பிட்ட ஒரு மதத்தை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது ஏன்? என்று யாரேனும் தர்க்கிக்க முடியும்.
இதற்கான விடை இதுதான்.
எல்லா அசத்திய மதங்களும் படைப்புக்களுக்கு வணங்கி வழிபடும் பாவத்தைப் போதிக்கின்றன. மனிதன் செய்யும் மிகவும் பாரிய பாவம் என்னவெனில், படைப்புக்களை வணங்கி வழிபடுவதானது மனிதனைப் படைத்ததன் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரான செயலாகும். மனிதன் படைக்கப்பட்டது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் அடிபணிந்து நடக்கவே, கீழ்ப்படிந்து செயற்படவே, வணங்கி வழிபடவேயாகும்.
அல்லாஹ் மிகத் தெளிவாக தனது அருள்மறையில் இவ்வாறு கூறுகின்றான்.

ஷஷஇன்னும், ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவி;ல்லை.|| (51:56)
விக்கிரகங்களுக்கு வணக்க வழிபாடுகள் செய்யத் தூண்டுகின்ற, படைப்புக்களுக்கு வணக்க வழிபாடுகள் செய்வதானது, அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுத்தராத மிகவும் பாரிய பாவச் செயலாகும். இந்தப் பாவச் செயலில் ஈடுபடுபவர் அதே நிலையில் மரணிப்பாரெனில் அவரது மறுவுலக வாழ்வு மிகவும் வேதனை தரத்தக்கதாக அமைய முடியும். இது நாம் கூறும் மிகச் சாதாரணமான ஒரு கருத்து அல்ல. சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வே தனது அருள்மறையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளான்.

ஷஷநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான், இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்|| (4:48, 116)

இஸ்லாத்தின் சர்வதேசியத் தன்மை:
அசத்திய மதங்களை- மார்க்கங்களைப் பின்பற்றுவதால் மனிதன் தவறின்பால் இட்டுச் செல்லப்படுகின்றான். எனவே, சத்திய மார்க்கமான இஸ்லாத்தை முழு உலக மக்களும் விளங்கிக் கொள்வதும், அதன் பின் அதனைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். இஸ்லாம் குறிப்பிட்டதொரு சமூகத்திற்ககோ, நாட்டிற்கோ, இடத்திறகோ, காலத்திற்கோ, உரியதொரு மதமல்ல. இதனைப் பின்பற்றுவோர் சுவனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு (கிறிஸ்தவ மதத்தில் போல்) ஞானஸ்நானம் செய்ய வேண்டும் என்றோ, குறிப்பிட்ட ஒருவரின் இரட்சிப்பில் தங்கியிருக்க வேண்டும் என்றோ கூறப்படுவது இல்லை. இஸ்லாத்தின் நோக்கங்கள் யாவும் தங்கியிருப்பது, முழு மனித சமூதாயமும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதிலேயேயாகும்.
அல்லாஹ்வின் ஏகத்துவம், அவனது தனித்துவம் வாய்ந்த தன்மை, அவனுக்கும் அவனுடைய படைப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பன பற்றி அறிவை மனிதன் என்றாவது பெற்றுக் கொண்டு, அவனுக்கு முற்றாக அடிபணிந்து நடக்க முற்பட்டால், அன்றே அவன் தனது உடல், ஆன்மா ஆகிய இரண்டின் மூலமும் முஸ்லிம் ஆகின்றான். சுவனத்தைப் பெறும் தகுதியையும் பெறுகின்றான். தூர இடத்தில் அறிமுகமற்று வாழும் ஒருவர் கூட அல்லாஹ்வின் படைப்புக்களை வணங்கி வழிபடுவதிலிருந்து முற்றாக விடுபட்டு அல்லாஹ்வுக்கு மட்டும் இணங்கி நடப்பவராக மாறுவதன் மூலம் அவர் எப்பொழுதும் ஒரு முஸ்லிமாக முடியும்.
மற்றொரு முக்கியமான அம்சம் என்னவெனில், அல்லாஹ்வுக்கு அடிபணிவது என்பது ஒருவர் நல்லது கெட்டது இரண்டில் ஒன்றை தெரிந்து எடுத்துக் கொள்வதைப் பொறுத்து அமைகின்றது. இஸ்லாம் கூறுகின்றபடி எவர் தீயவற்றிலிருந்து விலகி, நல்லவற்றை எடுத்துக் கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் உவப்புக்குரிய ஒருவரும், அவனுக்கு கீழ்ப்படிபவரும் ஆவார்.
மனிதன் தெரிவு செய்து கொள்பவற்றுக்கு அவனே பொறுப்பாளி ஆவான். முடிந்த அளவு முயற்சித்து நன்மையைத் தேர்ந்தெடுத்து அவற்றில் ஈடுபாடு கொள்ளவும் தீமைகளை முற்றாகவே தவிர்த்துக் கொள்ளவும் திட சங்கற்பம் பூண வேண்டும். மிகச் சிறப்பான நன்மை என்னவெனில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவனுக்கு மட்டும் வணக்க வழிபாடுகளைச் செய்வதே. மிகவும் கீழ்த்தரமான கண்டிக்கத்தக்க தீமை என்னவெனில் அல்லாஹ்வின் படைப்புக்களுக்கோ அல்லது அல்லாஹ்வுக்கும் அவனது படைப்புக்களுக்குமோ வணக்க வழிபாடுகள் செய்வதாகும்.
அல்குர்ஆன் இதுபற்றி இவ்வாறு கூறுகின்றது.

ஷஷஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கி;ன்றார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமே இருக்கின்றது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்|| (2:62)

ஷஷஇன்னும், அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால், அவர்கள் மேலே (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள். அவர்களில் சிலர் (தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும். (5:66)

அல்லாஹ்வை அறிந்து கொள்ளல்:
இங்கு மற்றொரு வினாவும் இருக்கின்றது. அதாவது, பல வகையான சமூக, கலாச்சார, பண்பாட்டுச் சூழல்களில் வாழும் எல்லா மனிதர்களும் அல்லாஹ்வில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை எவ்வாறு எதிர்பார்ப்பது? என்பதே அவ்வினாவாகும். அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, வணங்கி வழிபடும் பொறுப்பு மனிதன் மீது சுமத்தப்பட்டுள்ளதால், அவன் அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் வழியொன்று இருக்கத்தானே வேண்டும்?
உண்மையில், அல்லாஹ் தன்னைப் பற்றி அறிவைப் பெறுவதிலிருந்து மனிதனை அணாதையாக்கி விடவில்லை. மாறாக, அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் சக்தியை முழு மனித சமுதாயமும் பெற்றுள்ளது என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. மனிதனின் ஒரு பகுதியான ஆன்மா, அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் ஆற்றலை தன்னுள் இயற்கையாகவே கொண்டுள்ளது.
அல்குர்ஆனின் சூரதுல் அஃறாப் 172, 173 எண்களையுடைய வசனங்கள், நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட போது, அவர்களிலிருந்து தோன்றவுள்ள எதிர்கால சந்ததியினரை ஒன்று கூட்டி, அல்லாஹ் இவ்வாறு வினவியதாக குறிப்பிடுகின்றன.
ஷஷநான் உங்களுடைய இறைவன் அல்லாவா?|| அப்போது இவ்வினாவிற்கு விடையளித்த அவர்கள், ஷமெய்தான், நாங்கள் சாட்சி கூறுகின்றோம்|| என்று கூறினர். இவ்வாறு, ஆரம்பத்திலேயே அவர்களிடமிருந்து அல்லாஹ் வாக்குறுதியொன்றை வாங்கிக் கொண்டான்.
பின்னர், ஷநான் இறைவன், எனக்கு மட்டுமே வணக்க வழிபாடுகள் செய்ய வேண்டும்| என்ற வாக்குறுதியைப் பெறக் காரணமென்ன, அல்லாஹ்வே விவரிக்கின்றான்.
ஷஷ(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்|| என்று சொல்லலாம் என்பதற்காகவே. அதாவது ஷஅல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று எங்களுக்குத் தெரியாது, அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று எமக்கு எவரும் சொல்லித் தரவும் இல்லை என்று மனிதர் வாதிடலாம் என்பதற்காகவே அவனிடம் அத்தகைய வாக்குறுதி பெறப்பட்டது.
அல்லாஹ், அதே வசனங்களில் மீண்டும் கூறுகின்றான், ஷஷ(நீங்கள் கேட்கலாம்) இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே, தாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள், அந்த வழி கெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்துவிடலாமா? என்று
அல்லாஹ் இவ்வாறு விரிவாக விளக்கமளித்துச் சொல்வதில் இருந்து ஓர் உண்மை வெளிப்படுகின்றது. அதுதான் உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அல்லாஹ்வைப் பற்றிய இயற்கையான விசுவாசத்துடன் தான் பிறக்கின்றன என்பதாகும். அதேபோன்று அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், வழிபட வேண்டும் என்ற ஆசை இயற்கையாகவே அக்குழந்தையிடம் அமையப் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. இதற்கு அறபு மொழியில் ஷஃபித்றாஹ்| எனக் கூறப்படுகின்றது.
அக்குழந்தையைத் தனியாக வைத்துவிட்டு நாம் ஒதுங்கி இருந்தால், அதன் அறிவுக்கமைய அல்லாஹ்வை வணங்கும், வழிபடும். எனினும் அது மாற்றம் பெறுவது சூழலில் காணப்படுபவைகளைப் பொறுத்தேயாகும். அல்லாஹ் மொழிந்ததாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஷநான் எனது அடிமைகளை சத்திய மார்க்கத்தில் படைத்தேன். எனினும் துஷ்டர்கள் அவர்களைத் தவறான வழியில் இட்டுச் சென்றார்கள்||
மேலும் முஹம்மத (ஸல்) அவர்கள் இவ்வாறு மொழிந்தார்கள்.
ஷஷஎல்லாக் குழந்தைகளும் ஷஃபித்றாஹ்| என்ற நிலையிலேயே பிறக்கின்றன. பின்னர் (அவர்களுடைய) பெற்றோரே அவர்களை யூதராகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது ஜெராஸ்தரராகவோ மாற்றுகின்றனர்|| (புஹாரி, முஸ்லிம்)
அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள இயற்கை நியதிகளுக்கு அமைய அக்குழந்தை அவனுக்கு அடிபணியும் தன்மையைப் பெற்றுள்ளது போல் அதன் ஆன்மாவும் இயற்கையாகவே அவனுக்கு அடிபணியும் தன்மையைப் பெற்றுள்ளது. இது இயற்கையாகவே நடக்கும் ஒரு விஷயம். எனினும் அக்குழந்தையின் பெற்றோரே அதைத் தமது அடிச்சுவட்டில், தவறான வழிபாட்டு முறைகளில் கொண்டுபோக முயற்சிக்கின்றனர். அவ்வேளையில் தனது பெற்றோரின் வழிமுறைகளுக்கு எதிராக செயற்படும் சக்தி அதனிடம் இல்லாததால், அவர்கள் காட்டிய வழியிலேயே செல்ல முனைகின்றது. அப்பொழுது அக்குழந்தை பின்பற்றும் மார்க்கம் சிற்சில சம்பிரதாய சடங்குகளைக் கொண்டதாகவே இருக்கும். அதற்கு அக்குழந்தை பொறுப்பில்லாதது போலவே தண்டனையும் பெறமாட்டாது.
என்றாலும், மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான முழுக்கால வேளையிலும் உண்மையான இறைவன் (அல்லாஹ்) ஒருவன் இருக்கிறான் என்று சான்று பகரும் அம்சங்கள் உலகெங்கும் பார்க்கக் கூடியவனாக இருக்கின்றான். மனிதனின் ஆன்மாவே ஷஇறைவன் இருக்கிறான்| என்பதற்குப் போதுமான சான்றாகும்.
எனவே, மனித சமுதாயம் நேர்மையாக சிந்தித்து, ஆக்க பூர்வமான வழிகளில் செயற்படுமாயின் தவறான கோட்பாடுகளில் இருந்து விடுபட்டு ஏக இறைவனான அல்லாஹ்வை ஏற்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான வழிகள் அவர்களுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. எனினும், எப்பொழுதும், நிரந்தரமாக அல்லாஹ்வை உண்மைப்படுத்தும் அத்தாட்சிகளை மறந்து, மறுத்து வாழ முற்பட்டால், அவனது படைப்புக்களுக்கு வணக்கமும், வழிபாடும் செய்தால் அது பாரியதொரு குற்றமாகிவிடும். அதற்கான துன்பங்களிலிருந்து விடுபடுவது கஷ்டமேயாகும்.
ஓர் உதாரணம்:
தென்னமெரிக்க நாடான பிரஸீலின் அமஸோன் வனாந்தரத்தின் தென்கிழக்குப் பகுதியை யொட்டிய புராதன கிராமமொன்றில் வாழ்ந்த கோத்திரத்தார், தாம் வழிபடும் விக்கிரகமான ஷஸ்க்வட்ச்| (ளுமறயவஉh) சை வைப்பதற்கென சிறிய கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தனர். அந்த விக்கிரகம் உலகிலுள்ள அனைத்தையும் படைத்த வல்லமை பொருந்திய இறைவனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒன்று என்பது அந்தக் கோத்திரத்தார் நம்பிக்கை. ஒரு நாள் அந்த விக்கிரகத்திற்குத் தனது கௌரவத்தை செலுத்தி, வணக்க வழிபாடுகளைச் செய்யவென ஓர் இளைஞன் வந்தான். அவன் தன்னைப் படைத்து, பாதுகாத்து வரும் இறைவன் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவ்விக்கிரகத்தின் பாதத்தடியில் வீழ்ந்து வணங்கிக் கொண்டிருந்த வேளை, குஷ்டரோகம் பிடித்த, வயதான, அசிங்கமான நாய் ஒன்று அக்கட்டிடத்தினுள் நுழைந்தது, அவ்விளைஞன் தனது வணக்கத்தை முடித்துக் கொண்டு தலை நிமிர்ந்த போது, அந்த நாய் அதே விக்கிரகத்தின் மற்றொரு பக்கத்தில் தனது பின்னைய காலொன்றைத் தூக்கி சிறு நீர் கழிப்பதைக் காண்டான். அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நாயை விரட்டியடித்தான். எனினும், அவனது கோபம் மெல்ல மெல்லத் தணிந்து சாதாரண நிலைக்கு வந்த பொழுது சிந்தனை வேலைசெய்ய ஆரம்பித்தது. அந்த நாய் செய்த அசிங்கமான வேலையைக் கூட தடுத்துக் கொள்ள முடியாத இவ்விக்கிரகம் எப்படி எனது இறைவனாக பாதுகாவலனாக முடியும்? எப்படி இப்பிரபஞ்சத்தின் அதிபதியாக முடியும்? என்று அவனது உள்ளுணர்வு அவனைக் கேட்டது, இப்போது உண்மை புரிந்தது. இது என் இறைவனேயல்ல. அவன் (அல்லாஹ்) எங்கோ இருக்கிறான். இது வெறும் கற்சிலை மாத்திரமே! முடிவுக்கு வந்துவிட்டான்.
இந்த விஷயம் தொடர்பாக அவன் இரண்டு விதமாக நடக்க முடியும், ஒன்று, உண்மையான இறைவனை (அல்லாஹ்வை) அறிந்துணர்ந்து, அவனில் விசுவாசம் கொண்டு, அவன் கட்டளைப்படி வாழ்வது. மற்றது, தனது மனசாட்சிக்கும் நேர்மைக்கும் விரோதமான முறையில் தனது கோததிரத்தின் அசத்திய வழியில் செல்வது. உண்மையில் அவன் அக்கட்டிடத்தினுள்ளே கண்ட சம்பவம் இறைவனால் அவனுக்குத் தரப்பட்ட ஒரு அறிவுறுத்தலாகும். அதன் மூலம் அவனது விக்கிரக வணக்கம் தவறானது எனக் காட்டப்பட்டது.
நாம் கூறியபடி ஒவ்வொரு சமூகத்திற்கும், கோத்திரத்திற்கும், தேசத்திற்கும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அந்த உத்தமர்கள் மனிதனிடம் இயற்கையாகவே அமையப் பெற்ற இறைவிசுவாசத்தை மேலோங்கச் செய்ய சகலவிதமான ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். அத்துடன் மனிதனுள் அமையப் பெற்றுள்ள ஷஇறைவனை மட்டும் வணங்க வேண்டும்| என்ற ஆசையை பூரணப்படுத்தும் வகையில் அல்லாஹ்வின் அருள் மொழிகளையும் பெற்றுக் கொடுத்தார்கள். எனினும், பல நபிமார்களின் போதனைகள் சிதைக்கப்பட்டு, சாதாரண நன்மை தீமைகளை எடுத்துக் கூறும் பகுதிகள் மட்டும் மீதப்படுத்தப்பட்டன.
உதாரணமாக தவ்றாத்தின் பத்து கட்டளைகளைக் குறிப்பிடலாம். அவை கொஸ்பலிலும் தற்போதுள்ள நீதித்துறை சார்ந்த விடயங்களிலும் சேர்த்துக் கொள்ளப்பட்ட போது சிதைவும் திருத்தமும் செய்யப்பட்டதால் சமூகத்தில் கொலை, கொள்ளை, விபசாரம் போன்ற பாவச் செயல்கள் நடப்பதற்கு தாராளமாக வழிகள் திறந்து விடப்பட்டுவிட்டன.
இஸ்லாத்தில் திருத்தம் இல்லை, சிதைவு இல்லை. அது அல்லாஹ் அருளிய விதத்தில் இன்னும் தூய்மையாக இருக்கின்றது. இவை காரணமாக, அல்லாஹ்வில் முழுமையான விசுவாசம் கொள்வது, அவனுகச்கு அடிபணிவது, அவனது மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று அதன்படி வாழ்வது என்பன தொடர்பாக மனிதன் அல்லாஹ்விடம் விளக்கமளிக்க வேண்டியவனாகின்றான்.
இப்பிரபஞ்சத்தின் அதிபதியான அல்லாஹ் கருணைமிக்கவன். அவனுடைய அன்பையும் அருளையும் வேண்டி நிற்போம். அவன் காட்டிய நேர்வழியில் என்றென்றும் இருக்க உதவும்படி பிரார்த்தனைப் புரிவோம்.
சர்வ புகழும் நன்றியும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்து, சாந்தி, சமாதானம் என்பன இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார். வழித்தோன்றல்கள், நண்பர்கள், வழி நடப்போர் ஆகிய அனைவருக்கும் கிடைக்குமாக.

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் (மௌலித்) கொண்டாட்டம்.

நபி (ஸல்) அவர்களை நேஷpப்பது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும். அன்னாரவர்களை விரோதிப்பது ஈமானை முறிக்கும் nஷயலாகும்.. இதை பின்வரும் குர்ஆன் ஹதீத் வலியுறுத்துகின்றன.

النبي أولى بالمؤمنين من أنفسهم ( الأحزاب :6 )
”நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்)தான் முன்னுரிமை பெற்றவர்.” (அஹ்ஸாப் : 6)
وعن أنس رضي الله عنه : لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين (البخاري :15இ :இ فى رواية مسلم : 69 من أهله وماله بدل من والده وولده .
”நான் ஓர் அடியானிடத்தில் அவனது தந்தை, பிள்ளை, மக்கள் அனைவரை விடவும் விருப்பத்துக்குரியவனாக ஆகும் வரை அவ்வடியான் (பூரண) முஃமினாக முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (புஹாரி:15, முஸ்லிம்: 69)
நபியவர்களி மீது கொள்ள வேண்டிய ஷம்பூரண அன்பு, மதிப்பு என்பன அன்னாரவர்களை பின்பற்றுவதும் அன்னாரவர்களின் வாழ்க்கை முறையை உயிர்ப்பிப்பதும்தான். {قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ } (31) سورة آل عمران
”நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் அல்லாஹ்வை நேஷpப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேஷpப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.”
நபியவர்களின் அன்பின் பெயரால் வழிகேடுகள்:
ஸூபித்துவ வாதிகளும், தரீக்கா பக்தர்களும், கப்று வணங்கிகளும் நபி (ஸல்) அவர்களை நேஷpக்கின்றோம் எனக் வாதிட்டுக் கொண்டு பின்வரும் ஷிர்க்குகளையும், பித்அத்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்:
(1) நபியவர்களின் ஒளியே முதல் ஷpருஷ்டி (2) நபியவர்களின் ஆத்மா பூமியில் உலாவுகிறது.
(3) விழிப்பில் நபியவர்களைக் காணமுடியும். (4) நபியவர்களிடம் பிரார்த்தித்து தேவைகளைக் கோர முடியும்.
(5) நபியவர்களின் கப்ரை நோக்கி புனித யாத்திரை மேற்கொள்ளலாம்,
(6) நபியவர்களது கப்ரை அல்லது அதைஷ; சுற்றியுள்ள பகுதிகளை பறகத் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் முத்தமிட்டு தொட்டுக் கொஞ்சுதல். (7) மௌலித் (நபியவர்களின் பிறந்த தினத்தை) கொண்டாடுதல்.
மௌலித் என்றால் என்ன?
மௌலித் (مولد) என்ற அறபுப் பதத்திற்கு, பிறப்பு, பிறந்த காலம், இடம் என்ற பொருள்கள் உள்ளன. இது பேஷ;சு வழக்;கில் மௌலூது என்று கூறப்படுகிறது. அல்-மவ்லித் அந்நபவி என்றால், நபி (ஸல்) அவர்;களின் பிறந்த நாள் என்று பொருள்படும்.
நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை பிறந்ததாக முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில் காணப்படுகிறது. (முஸ்லிம் 1162). ஊர்ஜிதமான அறிவிப்பொன்றில் யானை வருடம் நபி (ஸல்) அவர்கள் பிறந்ததாக வந்துள்ளது. பெரும்பாலான அறிஞர்கள் நபி (ஸல்) அவர்கள் ரபீஉனில் அவ்வல் மாதம் பிறந்ததாக கருதுகின்றனர். இப்னு இஸ்ஹாக் என்ற நபி வரலாற்றாஷpரியர், இம்மாதம் 12ம் தினத்தன்று பிறந்ததாக கூறுகின்றார். இரண்டு, பத்து தினங்கில் பிறந்தார்கள் என்றும் வேறு ஷpல அபிப்பிராயங்களும் கூறப்படுகின்றன.
ஷpலர் வருடாந்தம் குறிப்பாக றபீஉனில் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள். இன்னும் இது வணக்கம் என்றும், அதனால் நன்மை கிடைப்பதாகவும் நம்புகிறார்கள்.
இது காலவோட்டத்தில், அவ்லியாக்கள், இமாம்கள் பெயர்களால் மௌலித்கள் உருவாக்கப்பட்டன. (உ-மாக: முஹ்யுத்தீன், ஷாஹுல் ஹமீத், பத்ரிய்யீன்கள்) அவைகள் ஷிர்க் தொனித்த பாடல்கள், களியாட்டங்கள் என விஷ்வரூபம் எடுத்தன.
மௌலித் கொண்டாட்டம் எப்போது தோன்றியது?
பாதிமியீன்களின் நான்காவது கலீபாவாகிய ஹிஜ்ரி 365ல் மரணித்த அல்முயிஸ் லிதீனில்லா ( المعز لدين الله ) என்பவர்தான் மௌலித்களை ஏற்படுத்தினார். இவர், நபி (ஸல்), அலி (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி), பாதிமா (ரழி), தற்போது ஆட்ஷpயிலிருக்கும் கலீபா ஆகியோர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதை அறிமுகப்படுத்தினார். பாதிமிய்யூன் என்போர் ஷீயாக்களில் அதி தீவிர கொள்கை உடையோர் ஆவார்கள். كتاب المواعظ والاعتبار للمقريزي 1ஃ490 وأحسن الكلام للمطيعي صــ : 44ஃ45
பின்பு ஹி. 495ல் மரணித்த அல்-முஸ்தஃலீ பில்லாஹ் ( المستعلي بالله ) என்பவரின் அவையின் பிரதம மந்திரியாகயிருந்த அல்-அப்லல் பின் அமீருல் ஜூயூஷ் ( الأفضل بن أمير الجيوش ) என்பவர் ஆறு மௌலித் கொண்டாட்டங்களையும ரத்துஷ; nஷய்தார். இவர் ஹி.595ல் மரணித்தார்.
( كتاب المواعظ والاعتبار 1ஃ432)
மக்கள் மறந்துவிடும் அளவுக்கு ஷpல காலம் மௌலித் கொண்டாட்டங்கள் ஓய்ந்து போயிருந்தன. பின்பு ஹி.525ல் மரணித்த அல்-ஆமிர் பி அஹ்காமில்லாஹ்(الآمر بأحكام الله ) என்ற கலீபா தனது பிரதம மந்திரி அல்-அப்லல் என்பவரை எதிர்க்கும் விதத்தில், மௌலித் கொண்டாட்டங்களை நடத்துமாறு உத்தரவிட்டார்.
உமர் அல் மல்லாஃவின் மௌலித் கொண்டாட்டம்.
ஹி.570ல் மரணித்த உமர் அல்மல்லாஃ( عمر الملاء) என்பவர் ஒரு ஸூபித்துவவாதி, அவர் ஈராக்கின் வட பகுதியில் அமைந்துள்ள அல் மவ்ஸில்(الموصل ) என்ற நகரத்தில் வருடாந்தம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இதில் மவ்ஸில் நகரத்துக் கவிஞர்கள் உட்பட பல புலவர்களும் கலந்து கொள்வார்கள். புலவர்கள் அரங்கேறி, நபி (ஸல்) அவர்களைப் புகழ் பாடுவார்கள்.
كتاب الروضتين : 2ஃ172
அரஷர் முழப்பருத்தீன் அவர்களின் மௌலித் கொண்டாட்டம்
ஹி. 630ல் மரணித்த அரசர் முழப்பருத்தீன் அவர்கள் தர்மம் கொடுப்பதில் பிரபல்யமானவர். ஷமூக Nஷவைகளில் ஈடுபாடுடையவர். ஆனால், ஸூபித்துவ வாதிகளுக்கு அடிமைப்பட்டவர். அவர்களின் நடன திக்ரில் கலந்து கொள்பவர். இதனால், அவர்களின் தாக்கத்தால் வருடா வருடம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை விமர்iஷயாகக் கொண்டாடுவார். இவ்வைபவத்திற்குப் பலபகுதிகளிலிருந்தும் மக்கள் ஒன்று கூடுவர். ஹி.633ல் மரணித்த இப்னு திஹ்யா ( ابن دحية) என்பவர், அத்தன்வீர் பீ மவ்லிதில் பஷீரின் நதீர்( التنوير فى مولد البشير النذير ) என்ற மௌலித் நூலை எழுதி இவ்வரஷருக்கு அன்பளிப்பாக ஷமர்ப்பித்து 1000 தீனார்களைப் பரிஷhகப் பெற்றார்.
கெய்ரோவை ஆக்கிரமித்த பிரான்ஸ் படைகள் மௌலிதை ஊக்குவித்தமை
ஹிஜ்ரி 1213ம் ஆண்டு பிரான்ஸ் படைகள் கெய்ரோவை ஆக்கிரமித்தன. படைத்தளபதி நெப்போலியன் பொனாபார்ட் (Nயிழடநழn டீழnயியசவந), ஸூபி பக்ரி என்பவரை அழைத்து, ஏன் நீங்கள் வழமை போல் மௌலித் கொண்டாட்டங்களை நடாத்தவில்லை என வினவினார். அதற்கு பக்ரி அவர்கள், உணவுப்பற்றாக்குறை, விலைவாஷp உயர்வு, இறக்குமதித் தடை, மக்களிடம் பணம் இன்மை போன்ற காரணங்களினால் இவ்வருடம் மௌலித் கொண்டாட்டங்களை நடாத்த முடியவில்லை எனக் கூறினார். அதற்கு நெப்போலியன், கட்டாயம் மௌலித் நடாத்தப்பட வேண்டும் எனக் கூறி 300 பிரான்ஸ் நாணயங்களை நன்கொடையாகக் கொடுத்தார். அதற்கு ஸூபி பக்ரி உடன்பட்டார். பிரான்ஸ் படைகளின் பாரிய மேளம் தட்டலுக்கும், டாங்கிகளின் வேட்டுக்களுக்கும் மத்தியில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
பிரான்ஸ் படைகள் மௌலித் கொண்டாட்டங்களை ஊக்குவித்ததன் நோக்கம் என்னவெனில், இக்கொண்டாட்டங்களில் மார்க்கவிரோதஷ; nஷயல்கள், ஆண்பெண் கலப்புகள், பஞ்ஷமாபாதகங்கள் ஆகியவைகளில் முஸ்லிம்களை மூழ்கியடித்து ஆக்கிரமிப்பாளர்களை விட்டும் திiஷ திருப்புவதாகும். ( تاريخ عجائب للجبرتي 2ஃ201இ 249இ 306 இ)
தற்காலம் வரைக்கும் எகிப்தில் நடாத்தப்படும் மௌலித் கொண்டாட்டங்களில் ஆபாஷங்கள், அநாஷ;ஷhரங்கள் மலிந்து காணப்படுவது ஷர்வ ஷhதாரண ஒன்றாக மாறிவிட்டது. இஸ்லாமிய ஆட்ஷpயை எதிர்க்கும் அரஷhங்கங்கள் மௌலிதை காலாகாலம் ஊக்குவித்துவருகின்றன.
மௌலித் கொண்டாட்டம் பற்றிய மார்க்கத் தீர்ப்பு
மக்களால் கொண்டாடப்படும் எந்த மௌலிதாக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸ் நோக்கில் வழிகெட்ட பித்அத்தாகும். இதற்குரிய ஆதாரங்கள் பின்வருமாறு:
1- அல்லாஹ் அல்லது அவனது திருத்தூதர் கற்றுத்தந்த வழிபாடுகள் மூலம் தான் அல்லாஹ்வை வணங்க வேண்டும். இஸ்லாத்தின் அனுமதியின்றி எவரும் புதியதோர் வணக்கத்தை உருவாக்கிவிட முடியாது. . {أَمْ لَهُمْ شُرَكَاء شَرَعُوا لَهُم مِّنَ الدِّينِ مَا لَمْ يَأْذَن بِهِ اللَّهُ..
”அள்ளாஹ் அனுமதிக்காத விடயங்களை ஷட்டவாக்கம் nஷய்யும் இணையாளர்கள் அவர்களுக்கு உண்டா?” என மறுத்து இறைவன் கூறுகிறான்: (அஷ்ஷூரா: 21)
2- மார்க்கத்தின் அனுமதி பெறாத புதிய வணக்கம் பித்அத் ஆகும்.. பித்அத்கள் எல்லாம் வழிகேடுகளாகும்.. இது பற்றி ஹதீத் பின்வருமாறு கூறுகிறது: عن جابر بن عبد الله رضي الله عنهما قال இ قال رسول الله صلى الله عليه وسلم : أما بعد : فإن خير الحديث كتاب الله இ وخير الهدي هدي
محمد صلى الله عليه وسلم இ وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة ( رواه مسلم :2002 ) وفى رواية للنسائي :1577 : وكل ضلالة فى النار .
‘ஷpறந்த வார்த்தை அல்லாஹ்வின் வேதமகும், அழகிய வழிகாட்டல் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களாகும், (மார்க்கத்தில்) புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகள், தீயவிடயஙகளாகும,;, பித்அத் எல்லாம் வழிகேடுகளாகும், ‘வழிகேடுகளெல்லாம் நரகத்தில்தான். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள.; (முஸ்லிம் ஹதீஸ் இல: 2002, நஸாயீ :1577).
பித்அத் எல்லாம் வழிகேடாகும் எனும் நபி மொழியிலிருந்து அழகிய பித்அத் என்பது கிடையவே கிடையாது என்பது தெளிவாகிறது. இதை அப்துல்லாஹிப்னு உமர் (றழி) அவர்களின் பின்வரும் கூற்றும் உறுதிப்படுத்துகிறது.
قال عبد الله بن عمر رضي الله عنهما : كل بدعة ضلالة وإن رآها الناس حسنة ( رواه محمد بن نصر المروزي فى كتابه السنة صـ : 83 بسند صحيح )
‘பித்அத்களை மக்கள் அழகானது எனக் கருதினாலும் எல்லா பித்அத்களும் வழிகேடுதான்’ ஆதாரம்: அஸ்ஸுன்னா, ஆஷpரியர் முஹம்மத்பின் நஸ்ர் அல்-மர்வஸி. ஹதீஸ் இல: 82
3- பித்அத்களை நல்ல நோக்கில் nஷய்வதனால் அவை வழிகேடு என்ற நிலையிலிருந்து நேர்வழி என்ற நிலைக்கு மாறிவிட முடியாது.
{قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًاஇ الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا} (103-104) سورة الكهف
”nஷயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்கள் தான் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்ஷp வீணாகிவிட்டது. அவர்களோ தாங்கள் அழகிய nஷயல் புரிவதாக நினைக்கின்றனர். (அல்கஹ்ப் : 104)
4- நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது, கிறிஸ்தவர்கள் இயேசுநாதரின் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்குஷ; ஷமமாகும். யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர்களை வணக்கவழிபாடுகள், திருநாட்கள் ஷம்பந்தப்பட்ட விடயங்களில் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
لتتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في جحر ضب لاتبعتموهم قلنا: يا رسول الله آليهود والنصارى؟ قال: فمن؟ (البخاري:3456இ مسلم:6723)
‘நீங்கள் உங்களுக்கு முன் வந்தவர்களின் வழியை ஷhனுக்குஷ; ஷhன் முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள், அவர்கள் உடும்பின் பொந்துக்குள்தான் புகுந்தாலும் நீங்களும் புகுந்துவிடுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள், கிறிஸ்தவர்களா? என வினவ, அவர்களல்லாது வேறு யார்? என பதிலளித்தார்கள்.’ (புஹாரி:3456, முஸ்லிம்:6723)
5) நபி (ஸல்) அவர்கள் பற்றியோ அல்லது நல்லடியார்கள் பற்றியோ புகழ்மாலை இயற்றி இறைவனை வழிபடுவது, பாடல்கள், கீதங்கள் மூலமாக அல்லாஹ்வை அணுகுவது வழிகெட்ட பித்அத்களாகும்.. இஸ்லாம் கற்றுத் தந்த வணக்க முறைகளில் கீதங்கள் மூலமாக இறைவனை அணுகும் முறை கிடையாது. அவ்வாறு nஷய்வது கிறிஸ்தவ, இந்து கலாஷhரமாகும்..
6) நடைமுறையிலுள்ள மௌலித் பாடல்களில் நபி (ஸல்) அவர்களை அளவு கடந்து புகழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஷpல பாடல்களில் ஷிர்க்கை, குப்ரை (இறை நிராகரிப்பை) ஏற்படுத்தக் கூடிய வஷனங்களும், நபி (ஸல்) அவர்களை இறைவனின் அந்தஸ்த்துக்கு உயர்த்திப் பாடப்பட்ட வஷனங்களும் காணப்படுகின்றன. இதை நபி (ஸல்) அவர்கள் தவிர்ந்து கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். (’لا تطروني كما أطرت النصارى بن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله’ (البخاري:3445
‘கிறிஸ்தவர்கள் மரியமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை அளவு கடந்து புகழ்ந்தது போன்று என்னைப் புகழாதீர்கள். நான் அவனின் அடிமைதான், எனவே அல்லாஹ்வின் அடிமை என்றும் திருத்தூதர் என்றும் nஷhல்லுங்கள்’ (புஹாரி : 3445)
7) மேற்குறிப்பிடப்பட்ட தீர்ப்புகளுக்கினங்க மௌலூது ஷபைக்கு ஷமூகமளிப்பதோ, அல்லது அதற்காக ஷமர்ப்பிக்கும் உணவை ஷhப்பிடுவதோ மௌலித் ஓதி பணம் ஷம்பாதிப்பதோ ஹராமான, அல்லாஹ்வின் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

தொகுப்பு: கலாநிதி, யு.எல். அஹ்மத் அஷ்ரப்
தலைவர், தாருல் ஹதீத் , கொழும்பு,
உதவிப் பேராசிரியர், மன்னர் ஹாலித் பல்கலைக்கழகம்
சவுதி அறேபியா.